IVF மூலம் குழந்தை; 10 ஆண்டுகளுக்கு பின் டிஏன்ஏ சோதனையில் தம்பதிக்கு அதிர்ச்சி!
10 ஆண்டுகளுக்கு பின் டிஏன்ஏ சோதனையால் தம்பதி அதிர்ச்சியடைந்துள்ளனர்.
IVF சிகிச்சை
அமெரிக்கா, உட்டாவின் சால்ட் லேக் சிட்டி பகுதியைச் சேர்ந்தவர் வான்னர். இவரது மனைவி டோனா ஜான்சன். இவர்கள் திருமணம் முடிந்த சில ஆண்டுகளில் முதல் குழந்தையைப் பெற்றெடுத்தனர்.
அதன்பின், குழந்தையைப் பெற்றெடுக்க முடியாத சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளனர். இதனால், 2007ஆம் ஆண்டில் ஐவிஎஃப் மூலம் இரண்டாவது குழந்தையைப் பெற முடிவு செய்து ஒரு மகனை பெற்றுள்ளனர்.
டி.என்.ஏ. பரிசோதனை
தொடர்ந்து, 10 ஆண்டுகளுக்குப் பிறகு டி.என்.ஏ. பரிசோதனை செய்ய முடிவு செய்துள்ளனர். ஆனால், அதில் ஐவிஎஃப் மூலம் பெற்றெடுத்த இரண்டாவது மகனின் தந்தை வான்னர் இல்லை எனத் தெரியவந்துள்ளது.
ஐவிஎஃப் முறையின்போது, டோனாவின் முட்டை மற்றொரு விந்தணுவால் கருவுற்றிருப்பது தெளிவானது. இதையறிந்து வேதனையடைந்த தம்பதி, “இது எங்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியையும், வருத்தத்தையும் கொடுத்தாலும், எங்கள் மகன் மீதான பாசம் மாறவில்லை.
விஷயம் பின்னாட்களில் தெரிந்தாலும், இரண்டாவது மகன் தவிக்கவில்லை. மிகவும் பக்குவமாக ஏற்றுக் கொண்டார்” எனத் தெரிவித்துள்ளனர்.