ஐஸ் கிரீமில் கிடந்த மனித விரல் யாருடையது..? DNA-வில் வெளியான பகீர் தகவல்!
ஐஸ் கிரீமில் மனித விரல் கிடந்த விவகாரத்தில், அந்த விரல் யாருடையது என்பது தெரியவந்துள்ளது.
மனித விரல்
மகாராஷ்டிர மாநிலம் மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் சமீபத்தில் ஆன்லைன் டெலிவரி மூலம் கோன் ஐஸ்கிரீம் ஆர்டர் செய்துள்ளார். அதனை திறந்து பார்த்தபோது அந்த ஐஸ் கிரீமுக்குள் மனித விரல் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
மேலும், இதுதொடர்பாக அவர் காவல் நிலையத்திலும் புகார் அளித்திருந்தார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து ஐஸ் கிரீமில் கிடந்த மனித விரல் தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டது.
யாருடையது?
இந்நிலையில் அந்த மர்ம விரல் யாருடையது என்பது தெரியவந்துள்ளது. ஐஸ் கிரீம் ஆலையில் வேலை பார்த்து வந்த ஓம்கர் என்பவரின் விரல் தான் அது என டி.என்.ஏ. பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
அவரது நடுவிரல் ஐஸ் கிரீம் தயாரிக்கும்போது துண்டாகி உள்ளே விழுந்ததாக கூறப்படுகிறது. முன்னதாக ஓம்கரின் டி.என்.ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஐஸ் கிரீம் உற்பத்தியாளரின் தயாரிப்பு ஆலைக்கு சீல் வைத்து உரிமத்தை ரத்து செய்திருந்தனர்.