திருமணமாகி 18 வருடங்கள்; நொந்துப்போன கணவன் - ஷாக் கொடுத்த DNA ரிசல்ட்!
கணவருக்கு டிஎன்ஏ பரிசோதனை முடிவுகள் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
DNA டெஸ்ட்
அமெரிக்காவை சேர்ந்த நபர் ஒருவர் ரெடிட் தளத்தில் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அதில், 20 ஆண்டுகளுக்கு முன் இவருக்கும் இன்னொரு பெண்ணுக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது.
இருவருடம் இணைந்து தொழில் ஒன்றை தொடங்கி நடத்தி வந்துள்ளனர். அதன்பின் திருமணம் செய்துள்ளனர். தொடர்ந்து, கருத்து வேறுபாட்டால் சில நாட்களுக்கு இருவரும் பிரிந்து வாழ்ந்துள்ளனர். பின்னர் சமாதானமாகி சேர்ந்து வாழத் தொடங்கியுள்ளனர்.
18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு அப்போதே இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. இந்நிலையில், ஒரு மருத்துவ காரணத்திற்காக குடும்பத்தினர் முழுவதுமாக டி.என்.ஏ. மரபணு பரிசோதனை செய்துள்ளனர்.
உடைந்த கணவன்
அந்த ரிசட்டில் இரட்டை குழந்தைகளுக்கு உயிரியல் ரீதியாக தந்தை அவர் அல்ல என்பது தெரியவந்துள்ளது. அதன்படி, யாரோ ஒருவரின் குழந்தையை அந்த கணவர் 18 ஆண்டுகளாக பராமரித்து வந்துள்ளார். இருவரும் பிரிந்த சில நாட்களின்போது, மற்றொரு ஆணுடன் ஏற்பட்ட தொடர்பால் மனைவிக்கு கர்ப்பம் ஏற்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த கணவன் தற்போது மனைவியை பிரிந்துள்ளார்.
இதற்கு நெட்டிசன்கள் பலர் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.