நிஜமாகவே என் பையன் தானா..? நம்பாமல் DNA டெஸ்ட் எடுத்த அப்பாஸ் - அதிர்ச்சி பின்னணி

Abbas
By Karthick Mar 21, 2024 05:27 AM GMT
Report

2000-ஆம் ஆண்டின் துவக்கத்தில் பிரபலமான நடிகராக வளம் வந்தவர் அப்பாஸ்.

அப்பாஸ்

தமிழில் சினிமாவில் அனைத்து காலகட்டத்திலும் பல சாக்லேட் பாய் ஹீரோக்கள் ஆதிக்கம் செலுத்துவர்கள். அவர்களில் சிலர் மட்டுமே காலம் கடந்து நிலைத்து தொடர்ந்து சினிமாவில் பயணிக்கின்றனர்.

abbas-takes-dna-test-to-confirm-his-son

சிலர் காலப்போக்கில் காணாமல் போகிறார்கள். அப்படி 2000-ஆம் ஆண்டுகளில் பெரும் பிரபலமாக இருந்த அப்பாஸ், பின்னர் காலப்போக்கில் அப்படியே மறைந்து போனார். மாடலாக இருந்த அவர், 1996-ஆம் ஆண்டு நடித்த காதல் தேசம் படம் பெரும் வெற்றியை பெற்று அவருக்கு புகழை தேடி தந்தது.

abbas-takes-dna-test-to-confirm-his-son

அப்படத்தை தொடர்ந்து VIP, ஜாலி போன்ற படங்களிலும் நடித்த அவருக்கு அதனை தொடர்ந்து வெற்றி படங்களை அமையவில்லை. ஹீரோவாக இல்லாமல், கதையின் நாயகனாக அவர் நடிக்க துவங்கிய படையப்பா, ஆனந்தம், கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன், மலபார் போலீஸ் போன்ற படங்களை வெற்றி பெற்றன.

abbas-takes-dna-test-to-confirm-his-son

சிறிய இடைவேளையில் பின்னர் வில்லன் நடிகராக மாறி திருட்டு பயலே படத்தில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியவர் சினிமாவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போனார். சில காலம் முன்பு தான் வெளிநாட்டில் வசித்து வரும் அவர், மீடியாக்களில் பேட்டியளித்து மீண்டும் பிரபலமாகினார்.

என் மகன் தானா...

அப்படி ஒரு பேட்டியில் அவர் சொன்ன தகவல் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது. அந்த பேட்டியில், அப்பாஸ்'ஸிடம் அவரது மூத்த மகன் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

கந்தசாமி பட ஷூட்டிங்கில்...ஏற்பட்ட பிரச்சனை ஓடிபோய்ட்டேன் - போட்டுடைத்த ஸ்ரேயா.

கந்தசாமி பட ஷூட்டிங்கில்...ஏற்பட்ட பிரச்சனை ஓடிபோய்ட்டேன் - போட்டுடைத்த ஸ்ரேயா.

அதற்கு, அவர் ரொம்ப அமைதியான ஒருவர் என்றும் அந்த வயதில் நான் ரொம்ப கலாட்டா எல்லாம் பண்ணிட்டு இருந்தேன் என குறிப்பிட்ட அப்பாஸ் ஆனால் அவன் ரொம்ப சிம்பிளாக Mature-ஆக இருக்கிறார் என்று குறிப்பிட்டார்.

abbas-takes-dna-test-to-confirm-his-son

அதன் காரணமாகவே ஆச்சரியப்பட்டு இவன் என்னுடைய மகனா என்ற சந்தேகம் எழ, பிறகு DNA செக் செய்து என் மகன் தான் என தெரிந்து கொண்டதாக குறிப்பிட்டார் அப்பாஸ். அவரின் இந்த கருத்துக்கள் தற்போது வைரலாகி வருகின்றது.