கந்தசாமி பட ஷூட்டிங்கில்...ஏற்பட்ட பிரச்சனை ஓடிபோய்ட்டேன் - போட்டுடைத்த ஸ்ரேயா.
தமிழ் சினிமாவில் கனவு கனியாக வளம் வந்தவர் நடிகை ஸ்ரேயா.
ஸ்ரேயா
2003-ஆம் ஆண்டு தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற உனக்கு 20 எனக்கு 18 படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றவர் ஸ்ரேயா. அதனை தொடர்ந்து மழை, திருவிளையாடல் ஆரம்பம் போன்ற படங்களில் நடித்தவருக்கு ரஜினியுடன் நடித்த "சிவாஜி" படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.
அப்படத்தை தொடர்ந்து தமிழில் விஜய்,விக்ரம், விஷால் என அநேக நடிகர்களுடன் நடித்து விட்டார் ஸ்ரேயா. தமிழை தாண்டி தெலுங்கிலும் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, பிரபாஸ் என வரிசையாக முன்னணி நாயகர்களுடன் நடித்து தென்னிந்திய சினிமாவில் பெரும் ஆதிக்கத்தை செலுத்தினார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாள மொழி படங்களில் நடித்தவர் 2008-ஆம் ஆண்டு The Other End of the Line, 2009-இல் Cooking with Stella, 2012-இல் Midnight's Children போன்ற இங்கிலிஷ் படங்களிலும் நடித்துள்ளார்.
நடிப்பில் பிஸியாக இருந்த போதே கடந்த 2018-ஆம் ஆண்டு ரஷ்யாவை சேர்ந்த ஆண்ட்ரி கோஷீவ்என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகளும் கடந்த 2021-ஆம் ஆண்டு பிறந்தது. இவர் அளித்த பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது.
ஓடிப்போய் விட்டேன்
அந்த பேட்டியில் ஸ்ரேயா பேசியது வருமாறு,
நடிகையாக அறிமுகமான ஆரம்ப நாட்களில் நிறைய பிரச்சனைகளை எதிர்கொண்டேன், ஒருமுறை படப்பிடிப்பை விட்டு ஓடிப்போய் விட்டேன். சிவாஜி படத்தில் நடித்த போது, ரஜினி எனக்கு பல நல்ல ஆலோசனைகளை வழங்கினார்.
கந்தசாமி படத்தில் ஒரு காட்சிக்கு நிறைய டேக் எடுத்தார்கள், அப்போதும் விக்ரம் பொறுமையாக என்னோடு நடித்தார். அதை மறக்கவே முடியாது.