நான் தான் வேண்டும்'னு அடம்பிடிச்சாரு - மேடையிலேயே போட்டுடைத்த ஆண்ட்ரியா
தமிழ் சினிமாவில் படங்களை தேர்ந்தெடுத்த நடித்து தனக்கென தனி அடையாளத்தை உண்டாக்கியுள்ளார் ஆண்ட்ரியா.
ஆண்ட்ரியா
பாடகராக பல வெற்றி பாடல்களை பாடிய ஆண்ட்ரியா, பின்னர் "பச்சைக்கிளி முத்துச்சரம்" படத்தில் நடிகையாக அறிமுகமாகினார். நடிப்பும் சிறப்பாக வரவே அடுத்தடுத்த படங்களில் நடிக்க துவங்கினார்.
அவருக்கு பெரும் வெற்றியை ஆயிரத்தில் ஒருவன் கொடுத்தது. மலையாளத்தில் அவர் அறிமுகமான அன்னயும், ரசூலும் படம் பெரும் வெற்றி படமாக அமைந்தது.
தமிழில் விஸ்வரூபம், அரண்மனை போன்ற கமர்ச்சியல் வெற்றி படங்களில் நடித்த ஆண்ட்ரியாவிற்கு தரமணி, வட சென்னை போன்ற படங்கள் அவரின் நடிப்பிற்கு பெரும் வரவேற்பை பெற்று கொடுத்தது.
அடம்பிடிச்சாரு
தொடர்ந்து நடிப்பு, இசை நிகழ்ச்சி என கவனம் செலுத்தி வரும் ஆண்ட்ரியாவின் நடிப்பில் "கா" என்ற படம் உருவாகியுள்ளது. படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய அவர், இயக்குநர் நாஞ்சில் படத்தை உயிரை கொடுத்து எடுத்திருக்கிறார் என்றார்.
இயக்குநர்கள் சிலர் படத்திற்கு முதலில் சிலரை செய்து அதற்கு அந்த நடிகை ஒத்துக்கொள்ளவில்லை என்றால் அவர்களுக்கு பதிலாக வேறொரு நடிகையை நடிக்க வைப்பார்கள். ஆனால் கா படத்தின் இயக்குனர் நாஞ்சில் அவ்வாறு இல்லை, படத்திற்கு ஆண்ட்ரியாதான் வேண்டும் என்று முதலில் இருந்தே அடம்பிடித்தார் என குறிப்பிட்டார்.