அந்த விஷயத்துக்கும் திருமணத்திற்கும் சம்மந்தமே இல்லையே - ஆண்ட்ரியா
தனக்கு திருமணம் செய்து கொள்ளவேண்டிய அழுத்தம் இல்லை என நடிகை ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார்.
ஆண்ட்ரியா
தமிழ் சினிமாவில் பாடகராக, நடிகையாக தனி இடத்தை பிடித்துள்ளார் ஆண்ட்ரியா. குறிப்பாக வட சென்னை படத்தில் ஆண்ட்ரியா நடித்த சந்திரா என்ற கதாபாத்திரம் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தன.
தமிழை தாண்டி தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து வரும் ஆண்ட்ரியா கிட்டத்தட்ட 40 வயதை நெருங்கியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளலாம் இருக்கின்றார்.
அப்படி இருக்க...
இது குறித்து அவரிடம் பேட்டி ஒன்றில் கேள்வி எழுப்பப்பட்ட போது, தனக்கு 20-25 வயதில் திருமணம் செய்த்து கொள்ளவேண்டிய அழுத்தமிருந்ததாகவும், ஆனால் தற்போது இல்லை என குறிப்பிட்டார் ஆண்ட்ரியா.
மேலும், திருமணம் செய்து கொண்டால் தான் மகிழ்ச்சியாக வாழமுடியும் என்பதெல்லாம் இல்லை என சுட்டிக்காட்டிய அவர், திருமணம் செய்து கொள்ளாமலே தன்னால் மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது என்றும் அதற்கு நான் பழக்கப்பட்ட விட்டதாகவும் கூறினார்.