Thursday, Jul 3, 2025

சூர்யகுமார் வைத்த அந்த 2 கோரிக்கை - இல்லையெனில்..மும்பை அணிவிட்டு விலக முடிவு!

Mumbai Indians Suryakumar Yadav
By Sumathi 10 months ago
Report

மும்பை அணிக்கு சூர்யகுமார் யாதவ் 2 கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சூர்யகுமார் யாதவ் 

குஜராத் டைடன்ஸ் அணியில் இருந்து ஹர்திக் பாண்டியாவை ட்ரேடிங் மூலம் வாங்கி, மும்பை இந்தியன்ஸுக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம், ஹர்திக் மீது அணிக்குள் கடும் அதிருப்தி இருப்பது தெரிய வருகிறது.

suryakumar yadav

இந்நிலையில், ஐபிஎல் 18ஆவது சீசனுக்கான மெகா ஏலத்திற்கு முன், ரோஹித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து விலகி, ஏலத்தில் கலந்துகொள்ள முடிவு செய்துள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

எந்த அணியும் செய்யாத படுமோசமான சாதனை - பாகிஸ்தான் செய்த செயல்!

எந்த அணியும் செய்யாத படுமோசமான சாதனை - பாகிஸ்தான் செய்த செயல்!


அணிக்கு கோரிக்கை

மேலும், இந்திய அணிக் கேப்டனாக இருக்கும் சூர்யகுமார் யாதவும், மும்பை இந்தியன்ஸஸை விட்டு விலக உள்ளதாகவும், இருப்பினும் அவருடம் மும்பை நிர்வாகம் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

mumbai indians

மும்பை இந்தியன்ஸுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில், ‘‘நான் இந்திய அணிக்கு கேப்டனாக இருக்கிறேன். இதனால், ஐபிஎலிலும் கேப்டனாக ஆடினால்தான் சரியாக இருக்கும்.

மேலும், மும்பை இந்தியன்ஸில் அதிக தொகைக்கு தக்கவைக்கும் நபராகவும் நான் இருந்தால்தான் சரியாக இருக்கும்’’ என 2 கோரிக்கைகளை வைத்திருப்பதாக கூறப்படுகிறது.