ஐபிஎல் ஏலம்; அந்த வீரருக்கு 50 கோடி சம்பளம் கொடுப்போம் - லக்னோ, டெல்லி முடிவு!
ஐபிஎல் தொடர் ஏலம் குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல்
2024 ஐபிஎல் தொடருக்கு முன் மும்பை இந்தியன் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டார். தொடர்ந்து, அவர் அந்த அணியை விட்டு விலகும் முடிவை எடுத்து விட்டதாகவும்,
2025 ஐபிஎல் மெகா ஏலத்துக்கு முன்னதாக அவர் அந்த அணியில் இருந்து விடுவிக்கப்படுவார் எனவும் கூறப்பட்டது. இந்நிலையில், இந்திய அணிக்கு டி20 உலகக் கோப்பை வென்று கொடுத்த கேப்டன் என்பதால் அவரை தங்கள் அணியின் கேப்டனாக்க வேண்டும் என பல அணிகளும் திட்டமிட்டுள்ளன.
ரோஹித் சர்மா
தற்போது, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் ரோஹித் சர்மாவை ஐபிஎல் ஏலத்தில் வாங்க சுமார் 50 கோடியை அந்த அணிகள் ஒதுக்கவுள்ளன.
ஐபிஎல் மெகா ஏலத்தில் ஒவ்வொரு அணிக்கும் 120 முதல் 140 கோடி வரை வீரர்களின் சம்பளத்துக்காக செலவு செய்ய அனுமதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Super singer மேடையில் யாழ்ப்பாணத்து குயில்- இறுதிச்சுற்றிக்கான பாடலா? இமான் பதிலால் குஷியான அரங்கம் Manithan
