இனி Google Pay, Paytm, PhonePe மூலம் இந்த லிமிட்டுக்குள் தான் பணம் அனுப்பலாம் - எவ்வளவு தெரியுமா?
பணப் பரிமாற்றத்திற்கான வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
யுபிஐ
யுபிஐயின் உதவியுடன் பணத்தை மாற்றுவது இன்று அடிப்படை தேவைகளில் ஒன்று என்ற அளவுக்கு ஆகிவிட்டது. அதன்படி, Paytm, PhonePe மற்றும் Google Pay போன்ற பயன்பாடுகளைப் பயன்படுத்தி பணம் பறிமாறப்படுகிறது.
நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவின் படி ஒரு நபர் ஒரு நாளில் யுபிஐ மூலம் ரூ.1 லட்சத்தை மாற்றலாம். இந்நிலையில், கூகுள் பே (Google Pay), பேடிஎம் (Paytm) மற்றும் போன்பே (PhonePe) போன்ற தளங்களிலும் அதிகபட்ச பரிமாற்ற வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பரிமாற்ற வரம்பு
கூகுள் பேயிலும் உங்கள் கணக்கிற்கு ரூ. 1 லட்சத்திற்கு மேல் மாற்ற முடியாது. இது தவிர, ஒரு நாளில் 10 க்கும் மேற்பட்ட பரிவர்த்தனைகள் அனுமதிக்கப்படாது. ஃபோன் பேயின் கீழ், பயனர்கள் ரூ. 1 லட்சம் வரை தொகையைப் பகிர்ந்து கொள்ளலாம்.
இந்த வரம்பு வங்கிக் கணக்கு மற்றும் நபரின் பயன்பாட்டைப் பொறுத்தது. பேடிஎம்-ல் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை பரிமாற்றம் செய்ய முடியும்.
ஒரு மணி நேரத்தில் 20,000 ரூபாய் பரிமாற்றம் செய்ய அனுமதிக்கப்படுகிறது. மேலும், 1 மணி நேரத்தில் அதிகபட்சமாக 5 பரிவர்த்தனைகள் மற்றும் 1 நாளைக்கு 20 பரிவர்த்தனைகள் செய்யலாம்.