Google Pay மூலம் புதிய கடன் வசதி அறிமுகம்.. எவ்வளவு தொகை பெறமுடியும் தெரியுமா?

Google Sundar Pichai
By Vinothini Oct 22, 2023 11:09 AM GMT
Report

கூகுள் புதிய கடன் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

கடன் வசதி

சிறு வணிகர்கள், நிறுவனங்களின் அன்றாட வணிகத் தேவைகளுக்கு வேண்டிய சிறிய தொகைகளை பெறுவதற்கு உடனே வங்கிகளுக்கு சென்று கடனை வாங்க முடியாது. இதனால் அதனை சுலபப்படுத்துவதற்கு கடன் வசதியை கூகுள் இந்தியா அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை கூகுள் நிறுவனத்தின் யுபிஐ-யான ஜிபே மூலமாகவே இந்த கடன் வசதியை பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

gpay launched sachet loans

இந்தியாவில் உள்ள வணிகர்கள் மற்றும் நுகர்வோருக்கு சாச்செட் கடன்களை ( அதாவது பொதுவாக ரூ.10,000 முதல் ரூ. 1 லட்சம் வரையிலான சிறிய கடன்களை பெற்றுக் கொள்ளவது ஆகும்) அதனை 7 நாட்கள் முதல் 12 மாதங்கள் வரை திருப்பிச் செலுத்தும் கால அவகாசம் உள்ளது.

பிரபல ஓடிடி நிறுவனம் அதிரடி முடிவு.. சபஸ்க்ரிப்ஷன் விலை அதிகரிப்பு - ஷாக்கான ரசிகர்கள்!

பிரபல ஓடிடி நிறுவனம் அதிரடி முடிவு.. சபஸ்க்ரிப்ஷன் விலை அதிகரிப்பு - ஷாக்கான ரசிகர்கள்!

கூகுளின் அறிவிப்பு

இந்நிலையில், வணிகர்கள் தங்கள் வர்த்தகத்திற்கு தேவையான மூலதன தேவைகளைத் தீர்க்க உதவும் ePayLater உடன் இணைந்து வணிகர்களுக்கான கடனை Google Pay வாயிலாக கூகுள் செயல்படுத்தவுள்ளது. அதனால் கூகுள் பே சாச்செட் என்ற கடன்கள் மூலம் குறைந்த அளவில் ரூ.15,000 முதல் கடன் பெற்றுக் கொள்ளலாம். இந்த தொகையை மாத வட்டி வெறும் ரூ.111 செலுத்தி அடைக்கலாம்.

இந்த கடன் சேவைகளை வழங்க DMI என்ற ஃபைனான்ஸ் உடன் கூகுள் நிறுவனம் இனைந்துள்ளது. நுகர்வோர் தரப்பில், ஆக்சிஸ் வங்கியுடன் இணைந்து தனிநபர் கடன்களை விரிவுபடுத்தும், ஐசிஐசிஐ உடன் இணைந்து, கூகுள் தனது யுபிஐ கடன் வழங்கும் சேவையையும் தொடங்கியுள்ளது.