கூகுள் பே, போன் பே பயன்படுத்துறீங்களா? இனி இதுக்கெல்லாம் கட்டணம் - புது ரூல்ஸ்!
ஆன்லைனில் பண பரிவர்த்தனை செய்வோர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
யுபிஐ செயலிகள்
இந்தியாவில், டிஜிட்டல் பணவரிவர்த்தனையான கூகுள் பே, போன் பே, பேடிஎம் போன்ற பல்வேறு யுபிஐ செயலிகள் மூலம் பணம் செலுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில், தற்போது பல்வேறு முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, கூகுள் பே, போன் பே, பேடிஎம் போன்ற செயலிகளின் நிறுவனங்களுக்கும், யுபிஐ பயனாளர்களுக்கும் புதிய விதிமுறைகளை ஜனவரி 1, 2024 முதல் இந்திய ரிசர்வ் வங்கி அமல்படுத்தியுள்ளது.
புது ரூல்ஸ்
ஓராண்டுக்கு மேல் செயல்படாமல் இருக்கும் யுபிஐ ஐடிக்களை செயலிழக்கச் செய்ய வேண்டுமென செயலிகளின் நிறுவனங்களுக்கும் வங்கிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது. மேலும், ரூ.2000க்கும் மேல் செய்யப்படும் முதல் பரிவர்த்தனைக்கு 4 மணி நேர கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
ரூ.2000க்கு மேல் தவறுதலாக ஒரு புதிய பயனாளருக்கு பணத்தை அனுப்பியிருந்தால் அதை நான்கு மணி நேரத்திற்குள் திரும்ப பெற்றுக்கொள்ளலாம். மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் செய்யப்படும் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான உச்சவரம்பை தற்போது ரூ.5 லட்சமாக உயர்த்தியுள்ளது.
ஆன்லைன் வாலட்டுகள் போன்ற பிரீபெய்டு பேமண்ட் கருவிகள் மூலம் ரூ.2000க்கு மேல் செய்யப்படும் குறிப்பிட்ட சில பரிவர்த்தனைகளுக்கு 1.1% பரிமாற்ற கட்டணம் விதிக்கப்படும். ந்த பரிமாற்ற கட்டணம், வணிக பரிமாற்றங்களுக்கு மட்டுமே.. நாடு முழுவதும் யுபிஐ ஏடிஎம்கள் நிறுவப்படும்.
ஒரு வங்கி ஏடிஎம்மில் எவ்வாறு டெபிட் அட்டை மூலமாக பணம் எடுக்க முடியுமோ அது போல நமது செல்போனில் உள்ள யுபிஐ கியுஆஇ கோடை ஸ்கேன் செய்து அதில் பணம் எடுத்துக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.