கூகுள் பே, போன் பே பயனாளர்களுக்கு எச்சரிக்கை.. டிசம்பர் 31 தான் கடைசி நாள் - NPCI புதிய அறிவிப்பு!
யுபிஐ பயனாளர்களுக்கு புதிய அறிவிப்பு ஒன்றை NPCI வெளியிட்டுள்ளது.
டிஜிட்டல்
இந்தியாவில் பலர் UPI பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதற்கு ஜிபே, போன்பே, பேடிஎம் உள்ளிட்ட ஆன்லைன் பேமன்ட் சேவைகள் பயன்படுகின்றன. இந்த பரிவர்த்தனைக்காக யுனிபைட் பேமன்ட்ஸ் இன்டர்பேஸ் (Unified Payments Interface) என்னும் யுபிஐ ஐடி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த ஆப் சேவைகளை பயன்படுத்தி சில நிமிடங்களில் எங்கு இருந்து வேண்டுமானாலும் பண பரிவர்த்தனை செய்துகொள்ளலாம். இதனால் பல மோசடிகள் மற்றும் சிக்கல்கள் எழுந்துள்ளன. இதனால் நேஷனல் பேமன்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனம், யுபிஐ ஐடி தொடர்பாக பல்வேறு வழிகாட்டுதல்களை அவ்வப்போது வழங்கி வருகிறது.
புதிய அறிவிப்பு
இந்நிலையில், NPCI தற்பொழுது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஒரு ஆண்டுக்கும் மேலாக பயன்படுத்தாமல் இருக்கும் யுபிஐ ஐடிக்கள் முற்றிலும் செயலிழக்க செய்யப்படும் என்றும் டிசம்பர் 31 ஆம் தேதியே அதற்கு கடைசி நாள் என்றும் அதிரடியாக குறிப்பிட்டுள்ளது. மேலும், நம்மில் பலர் ஒரு மொபைல் நம்பரை வைத்து யுபிஐ ஐடியை ஓப்பன் செய்திருப்பார்கள்.
பின் நாளடைவில் வேறு மொபைல் நம்பருக்கு மாறியிருப்பார்கள். அதனால் பழைய நம்பரின் யுபிஐ ஐடியை டீஆக்டிவேட் (deactivate) செய்ய மறந்திருக்க வாய்ப்புள்ளது.
இதனால், அந்த யுபிஐ ஐடி அந்த மொபைல் நம்பரோடு இணைப்பிலேயே இருக்கும், அந்த நம்பர் வேறு ஒருவருக்கு கொடுக்கப்படும், இதனால் பல சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை தவிர்க்க ஒரு ஆண்டுக்கும் மேலாக பயன்படுத்ததாத ஐடிகளை என்சிபிஐ (NPCI) நிறுவனம் செயலிழக்க செய்ய இருக்கிறது.