இனி பாஸ்போர்ட் பெற இது கட்டாயம் - மத்திய அமைச்சரகம் அறிவிப்பு
புதிய பாஸ்போர்ட் பெற விண்ணப்பிற்கும் நபர்கள் இனி டிஜிலாக்கர் செயல்முறை பூர்த்தி செய்ய வேண்டும் என மத்திய அமைச்சரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
புதிய அறிவிப்பு
வெளிநாடு பயணங்களை மேற்கொள்ள பாஸ்போர்ட் பெறுவது அவசியமாகும். தற்போது ஆதார் மற்றும் பான் கார்டு ஆகியவற்றை பயன்படுத்தி பாஸ்போர்ட் வழங்கப்பட்டு வருகிறது.
பாஸ்போர்ட் பெற மத்திய அமைச்சகத்தின் www.passportindia.gov.in என்ற இணையத்தளம் மூலம் விண்ணப்பித்தால் 30 நாட்களுக்குள் விண்ணப்பதாரருக்கு பாஸ்போர்ட் வழங்கப்படும்.
இந்நிலையில், தற்போது பாஸ்போர்ட் பெற புதிய அறிவிப்பு ஒன்றை சென்னை பாஸ்போர்ட் மண்டல அலுவலகம் வெளியிட்டுள்ளது.
இனி இது கட்டாயம்
அதில், பாஸ்போர்ட் பெற விண்ணப்பிப்பவர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு, பிறப்பு சான்றிதழ் மற்றும் வங்கி கணக்கு புத்தகம் போன்றவற்றை டிஜிலாக்கர் இணையசேவையில் பதிவேற்றம் செய்யவது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்களின் ஆவணங்களின் ஒட்டுமொத்த பரிசீலனை நேரத்தை குறைக்க இந்த புதிய நெறிமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
டிஜிலாக்கரில் பதிவேற்றம் செய்தால் ஆவணங்களை நேரில் விண்ணப்பதாரர் எடுத்து செல்லவேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.