எலான் மஸ்க்கை ஓரங்கட்டிய உ.பி. நபர்; உலகின் முதல் பணக்காரர் - யார் தெரியுமா?
எலான் மஸ்க்கை ஓரங்கட்டி உலகின் முதல் பணக்காரராக நபர் ஒருவர் அறியப்பட்டுள்ளார்.
உலகின் பணக்காரர்
உத்தரபிரதேசம் மாநிலம் ஹத்ராஸைச் சேர்ந்தவர் அஜித். இவர் கடந்த மாதம் ஒரு நாள் தனது வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 1,800 ஒரு முறையும், ரூ. 1,400 ஒரு முறையும் எடுத்துள்ளார்.
பின் அவரது கணக்கிற்கு 1,00,13,56,00,00,01,39,54,21,00,23,56,00,00,01,39,542. பணம் வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து சில மணி நேரங்களுக்கு உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க்கை ஓரங்கட்டி, அஜித் பணக்கார நபராக இருந்தார்.
இதனையடுத்து அஜித் தனது வங்கியைத் தொடர்பு கொண்டு நடந்த விபரங்களைக் கூறி, இதற்கான காரணம் என்ன என்பதைக் கேட்டறிந்துள்ளார்.
தொழில்நுட்பக் கோளாறு
ஜம்மு காஷ்மீரில் உள்ள வங்கியின் ஒரு கிளையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் எதிர்பாராத தொகை அவரது கணக்கில் கிரெடிட் செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. உடனே அஜித் காவல்நிலைய சைபர் கிரைம் பிரிவில் இதுகுறித்து புகாரளித்துள்ளார். அதன்படி, போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில், அஜித்தின் வங்கிக் கணக்கு எந்தப் பணப் பரிவர்த்தனையும் செய்ய முடியாத வகையில் அதிகாரிகளால் முடக்கப்பட்டுள்ளது.