ஒரே இரவில் 37,000 பேரின் குடியுரிமை பறிப்பு - எங்கு, என்ன காரணம்?
ஒரே இரவில் 37,000 பேரின் குடியுரிமையை ரத்து செய்துள்ளது.
குடியுரிமையை ரத்து
மத்திய கிழக்கில் உள்ள ஒரு நாடு குவைத். இந்த நாட்டின் ஒட்டுமொத்த மக்கள்தொகையே 50 லட்சத்திற்குக் கீழ் தான். இங்கு பல்வேறு உலக நாடுகளில் இருந்து மக்கள் வேலைக்காக செல்வார்கள்.
இந்நிலையில், குவைத்தில் திடீரென இப்போது சுமார் 37 ஆயிரம் பேரின் குடியுரிமை பறிக்கப்பட்டுள்ளது. அதிலும் பெரும்பாலானோர் பெண்கள் எனக் கூறப்படுகிறது. குவைத் புதிய ஆட்சி தலைவர் எமீர் ஷேக் மெஷால் அல்அஹ்மத் அல்-சபாஹ் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
என்ன காரணம்?
"உண்மையான குவைத் மக்களுக்கே நாடு சொந்தம்" என அறிவித்து, இந்த குடியுரிமை ரத்து நடவடிக்கையை எடுத்துள்ளார். அதன்படி, 1987 முதல் திருமணத்தின் மூலம் குடியுரிமை பெற்ற பெண்கள், இரட்டை குடியுரிமை வைத்தவர்கள் மற்றும் போலியான ஆவணங்களின் மூலம் குடியுரிமை பெற்றவர்கள் இதன்மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே இங்கு சுமார் ஒரு லட்சம் பேர் குடியுரிமை இல்லாமல் நாடற்ற மக்களாக இருக்கிறார்கள். திடீரென குடியுரிமையை ரத்து செய்யும் நடவடிக்கை என்பது இது முதல்முறை இல்லை.
ஆனால், ஒரே நேரத்தில் இத்தனை ஆயிரம் பேருக்குக் குடியுரிமை ரத்து செய்யப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.