ஜப்பானை பின்னுக்கு தள்ளிய இந்தியா - எதில் தெரியுமா?
இந்திய பொருளாதாரம் உலகளவில் 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
நிதி ஆயோக்
நிதி ஆயோக்கின் 10-ஆவது நிர்வாக கவுன்சில் கூட்டத்தில் நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) பிவிஆர் சுப்ரமணியம் கலந்துக் கொண்டார்.
பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒட்டுமொத்த புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார சூழல் இந்தியாவுக்கு சாதகமாக உள்ளது. இதன் காரணமாக 4 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை இந்தியா எட்டியுள்ளது.
இந்திய பொருளாதாரம்
உலக பொருளாதார வரிசையில் தற்போது அமெரிக்கா, சீனா, ஜெர்மனிக்கு அடுத்தபடியாக இந்தியா 4-வது இடத்தைப் பிடித்துள்ளது. ஏற்கெனவே அந்த இடத்தில் இருந்த ஜப்பான் தற்போது இந்தியாவுக்கு பின்தள்ளப்பட்டு 5-வது இடத்தில் உள்ளது.
திட்டமிடப்பட்ட மற்றும் சிந்தித்து செயலாற்ற வேண்டிய நடவடிக்கைகளில் நாம் உறுதியுடன் செயல்பட்டால் இன்னும் இரண்டரை அல்லது 3 ஆண்டுகளில் உலகளவில் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்க முடியும்.
சொத்துக்களை பணமாக்குவதற்கான இரண்டாம் சுற்று திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான அறிக்கை ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்படும் எனத் தெரிவித்துள்ளார்.