மின்சாரம் இன்றி இருளில் மூழ்கிய கிராமம்.. நள்ளிரவில் இப்படி ஒரு சம்பவமா..? பின்னணி என்ன?
ஊரில் உள்ள டிரான்ஸ்ஃபார்மரை மர்ப நபர்கள் திருடிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப் பிரதேசம்
உத்தரப் பிரதேச மாநிலம் பைரேலியில் கிராமத்தில் கடந்த டிசம்பர் 14 ஆம் தேதி முதல் மின் வெட்டி ஏற்பட்டுள்ளது. அப்பகுதி மக்கள் சிறிது நேரங்களில் வந்து விடும் என நினைத்துள்ளனர். ஆனால் பல வாரங்களாக மின்சாரம் கிடைக்காததால் சோராகா கிராமம் பல வாரங்களாக இருளில் மூழ்கியது.
மேலும் கிராம மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த சம்பவம், மின்சார துறை அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது சோராகா கிராமத்தில் அமைக்கப்பட்ட டிரான்ஸ்ஃபார்மர் இல்லாததைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.இந்த சம்பவம் தொடர்பாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
மர்ப நபர்கள்
முதற்கட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. மர்ப நபர்கள் செம்பு வயர்கள், மற்ற இரும்பு பொருட்கள் உள்ளிட்டவை எடுத்துச் சென்றுள்ளனர்.
மேலும் மின் வினியோகம் சார்ந்த விவகாரம் என்பதால், மின்துறை சார்ந்தவர்கள் உதவியின்றி இந்த திருட்டு சம்பவம் அரங்கேறி இருக்க முடியாது என்று காவல் துறைதரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து திருட்டு சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவை கொண்டு விசாரணையை காவல்துறையினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.