திருமணமாகாத ஜோடிகள் தங்க அனுமதி இல்லை.. OYO கொடுத்த ஷாக் - வெளியான தகவல்!
OYO விடுதிகளுக்கு புதிய வருகை விதியை அறிமுகப்படுத்தியுள்ளது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
OYO விடுதி
இந்தியாவில் பல இடங்களில் ஹோட்டல் இருந்தாலும், OYO ஹோட்டல்கள் தனித்துவமாக பலரால் அறியப்பட்டது. மலிவான விலையில், பாதுகாப்பாகவும், உடனே ரூம்கள் கிடைக்கும் என்பதால் அதிகமானோர் இதனை பயன்படுத்த தொடங்கினர்.
குறிப்பாக இளைஞர்கள் ஓயோவில் காதலியுடன் அறை எடுத்து தங்குவதால் இந்த ஒயோ ஹோட்டல் பிரபலமடைந்தது. ஓயோவில் காதலியுடன் இளைஞர்கள் அறையெடுத்து தங்குபவர்கள் அடையாள அட்டையை கட்டாயமாக காட்ட வேண்டும்.
அதாவது ஆதார், வாக்காளர் அடையாள அட்டை போன்றவை. அதில் அவர்கள் 18 வயதுக்கு மேல் உள்ளதா என்று சரிபார்க்கப்படுகிறது என்ற விதிமுறை இருந்தது. இந்நிலையில், நாடு முழுவதும் பிரபலமடைந்து வரும் OYO புதிய வருகை விதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
புதிய விதி
அதில் திருமணமாகாத ஜோடிகள் இனி ஓயோ விடுதிகளில் தங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என கூறப்பட்டுள்ளது.மேலும் ஓயோவின் திருத்தப்பட்ட விதியின் கீழ், ஆன்லைனில் முன்பதிவு செய்திருந்தாலும், அனைத்து ஜோடிகளும் வருகையின் போது தங்களது உறவுக்கான சரியான சான்றைச் சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
மேலும், ஜோடிகளின் முன்பதிவுகளை நிராகரிக்கும் அதிகாரத்தை ஓயோ தனது பங்குதாரர் விடுதிகளுக்கு வழங்கியுள்ளது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.மேலும் இந்த நடைமுறை உத்தர பிரசேத மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் திருமணமில்லாத ஜோடிகள் ஹோட்டலில் தங்குவதைத் தடுக்க எந்த சட்டமும் இல்லை . இருப்பினும், ஒரு ஜோடியை தங்க அனுமதிப்பது குறித்தான இறுதி முடிவை அந்த ஹோட்டல் உரிமையாளர்கள் அல்லது மேலாளர்களின் தான் எடுக்க முடியும்.