Wednesday, Apr 30, 2025

கரண்ட் வயர் மேல் படுத்து தூக்கம்; அதிர்ந்த ஊர் மக்கள் - வைரலாகும் வீடியோ

Viral Video Andhra Pradesh
By Karthikraja 4 months ago
Report

போதையில் இளைஞர் மின் வயர் மீது படுத்திருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மதுபோதை

மது அருந்திவிட்டு குடிமகன்கள் ரோட்டில் செய்யும் அட்டூழியத்தால் ஒவ்வொரு நாளும் பொதுமக்கள் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். 

andhra man lying on electric pole wire

இதே போல் ஆந்திராவில் குடிமகன் ஒருவர் செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆந்திர மாநிலம் மன்யம் மாவட்டம் சிங்கிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கண்ணா.

மின் கம்ப வயர்

மதுவுக்கு அடிமையான இவர் நேற்று(31.12.2024) முழு போதையில் இருந்தார். தொடர்ந்து புத்தாண்டு அன்றும் மது அருந்த ஆசைப்பட்டுள்ளார். மது வாங்க பணமில்லாத நிலையில் தனது தாயிடம் பணம் கேட்டுள்ளார்.

மது அருந்துவதற்கு எல்லாம் பணம் தர முடியாது என அவரது தாய் கண்டித்த நிலையில் வேகமாக மின் கம்பத்தில் எறியுள்ளார். இதை பார்த்த அதிர்ச்சியடைந்த அக்கபக்கத்தினர், அசம்பாவிதம் எதுவும் நிகழாமல் தடுக்க உடனடியாக மின் இணைப்பை துண்டித்துள்ளனர். 

மின் கம்பத்தில் ஏறிய அவர், வயர்கள் மீது மெத்தையில் படுப்பது போல் படுத்து விட்டார். 30 நிமிடங்களாக வயரின் மேல் படுத்து இருந்த இவர், குடிக்க பணம் தருவதாக ஊர் மக்கள் கூறியதையடுத்து கீழே இறங்கி வந்தார். இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.