Time Machine..முதியவர்களை இளமையாக்குவதாகக் கூறி ரூ.35 கோடி மோசடி-நூதன கொள்ளை!

Uttar Pradesh India Crime
By Vidhya Senthil Oct 04, 2024 06:53 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in குற்றம்
Report

Time Machine மூலம் முதியவர்களை இளமையாக்குவதாகக் கூறி ரூ.35 கோடியை ஏமாற்றி மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப் பிரதேசம்

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் கித்வாய் நகரைச் சேர்ந்தவர்கள் ராஜீவ் குமார் - ரஷ்மி துபே தம்பதியினர் இஸ்ரேலிலிருந்து வரவைக்கப்பட்ட Time Machine(ரிவைவல் வேர்ட்) மூலம் முதியவர்களை 25 வயது இளமையாக்குவதாகக் கூறி ஒரு சிகிச்சை மையத்தைத் திறந்துள்ளனர்.

time machine

இதன் மதிப்பு ₹25 கோடி ரூபாய் ஆகும். மேலும்   ஐந்து நாட்களுக்கு  'ஆக்சிஜன் தெரபி' சிகிச்சையை எடுத்துக்கொண்டால் இளமையாக மாறிவிடலாம் என்று கூறி விளம்பரம் செய்துள்ளனர். இந்த தெரபிக்கு 10 அமர்வுகளுக்கு ரூ.6 ஆயிரம் எனக் கட்டணம் வசூலித்துள்ளனர்.

தோழியை மணக்க ஆணாக மாறிய பெண் அரசு ஊழியர் - கடைசியில் வேறொருவரை மணந்த தோழி!

தோழியை மணக்க ஆணாக மாறிய பெண் அரசு ஊழியர் - கடைசியில் வேறொருவரை மணந்த தோழி!

மேலும் 3 வருடத்திற்கு ரூ.90 ஆயிரம் சிறப்புச் சலுகை என்றும் விளம்பரம் கொடுத்துள்ளனர்.புதியதாக இந்த தெரபில் சேர்பவர்களுக்குப் பரிசுத் தொகையும் வழங்கியுள்ளனர். இந்த நிலையில் இளைஞர்களாக வேண்டும் என்ற ஆசையில் முதியவர்கள் சிலர் இந்த 'ஆக்சிஜன் தெரபி' சிகிச்சை மேற்கொண்டுள்ளனர்.

 மோசடி

பின்னர்தான் இது மோசடி என்று அவர்களுக்குத் தெரியவந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்த மோசடியில் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான ரேணு சிங், தன்னை ரூ.10.75 லட்சம் வரை ஏமாற்றி விட்டதாகக் காவல்நிலையத்தில் புகார்  அளித்துள்ளார்.  . புகாரி அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

uttar pradesh

அப்போது 100க்கும் மேற்பட்டவர்களிடம் ரூ.35 கோடிக்கு மேல் மோசடி நடந்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் இந்த தம்பதி நூதனமாக மோடி செய்து தலைமறைவாகியுள்ள தம்பதியை  காவல் துரையினர் தேடிவருகின்றனர்.

திரைப்படத்தை மிஞ்சும் அளவிற்கு மோசடியில் ஈடுப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.