கட்சியில் சீட் தருவதாக கூறி ரூ.7 கோடி மோசடி - வசமாக சிக்கிய பா.ஜ.க பெண் நிர்வாகி!
பா.ஜ.க பெண் நிர்வாகி ஒருவர் கட்சியில் சீட் வாங்கி தருவதாக கூறி ஏமாற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண் நிர்வாகி
கர்நாடகா மாநிலத்தில் இந்து அமைப்பின் தீவிர ஆதரவாளரும், பஜ்ரங் தள் தலைவருமான சைத்ரா குந்தாபூர், இஸ்லாமியர்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்து வந்தார். இந்துத்துவா பேச்சாளரான இவர் தொழிலதிபர் கோவிந்த்பாபு பூஜாரி என்பவரிடம், தேர்தலில் போட்டியிட சீட் வாங்கித் தருவதாகக் கூறியுள்ளார்.
பின்னர், ஒருவரை கூட்டிவந்து அவர்தம் ஆர்.எஸ்.எஸ். தலைவர் விஸ்வநாதன் என்றும், கர்நாடக பாஜக தேர்தல் பொறுப்பாளர் என்றும் கூறி கோவிந்த்பாபு பூஜாரிக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். மேலும் , தேர்தலில் போட்டியிடுவதற்காக முதல் தவணை, இரண்டாம் தவணை என்று சைத்ரா குந்தாபூர் சுமார் 7 கோடிகள் வரை கொடுத்துள்ளார்.
மோசடி
இந்நிலையில், வேட்பாளர் பட்டியலில் பெயர் இல்லாததால் சந்தேகமடைந்த தொழிலதிபர் போலீசில் புகாரளித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியபொழுது பெங்களூருவில் சாலையோர கடை நடத்தி வரும் ரமேஷ் என்பவரைத்தான் ஆர்.எஸ்.எஸ் தலைவர் விஸ்வநாதன் என்று கூறி ஏமாற்றியது தெரியவந்துள்ளது.
மேலும் இதுகுறித்து கேட்டபோது சைத்ரா கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து சைத்ராவின் கூட்டாளிகள் 4 பேரும் சிக்கிவிட்டனர். மேலும் 4 பேரை கர்நாடகா போலீஸ் வலை வீசி தேடி வருகிறது. பின்னர் இந்த பெண் நிர்வாகியிடம் பணம் கொடுத்து ஏமாந்தது, இவர் மட்டும்தானா இல்லை இன்னும் சிலர் உள்ளனரா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.