Wednesday, May 14, 2025

பெண்ணை தாக்கிய பாஜக நிர்வாகி..போலீசார் வழக்குப்பதிவு..!

BJP
By Thahir 3 years ago
Report

பெண்ணை தாக்கிய பாஜக பிரமுகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வைரலாகும் வீடியோ காட்சி

ஹவுசிங் சொசைட்டியில் ஆக்ரமிப்பு செய்ததாக கூறிய பெண்ணிடம் பா.ஜ.க. தலைவர் ஸ்ரீகாந்த் தியாகி தகராறு செய்துள்ளார்.அந்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பெண்ணை தாக்கிய பாஜக நிர்வாகி..போலீசார் வழக்குப்பதிவு..! | Bjp Executive Who Assaulted Woman Police Case File

பா.ஜ.கவின் கிசான் மோர்ச்சாவின் தேசிய செயற்குழு உறுப்பினர் மற்றும் யுவ கிசான் சமிதியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமானவர் ஸ்ரீகாந்த் தியாகி.

இவர் தற்போது நொய்டாவில் வசித்து வருகிறார். அங்கு அவர் தங்கியுள்ள ஹவுசிங் சொசைட்டியில் , சட்டத்திற்கு புறம்பாக மரங்களை நட்டு ஆக்கிரமிப்பு செய்வதாக அங்குள்ள பெண் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் கோவம் அடைந்த ஸ்ரீகாந்த் தியாகி அந்த பெண்ணிடம் கடுமையாக நடந்துகொண்டார். மேலும் அவர் அந்த பெண்ணை இழிவாக பேசியதாக கூறப்படுகிறது.

ட்விட்டரில் வெளியிடப்பட்ட வீடியோவில் ஸ்ரீகாந்த் தியாகி அந்த பெண்ணை தள்ளிவிடும் காட்சிகள் பதிவாகியுள்ளதால் தற்போது போலீசார் வழக்கு பதிவு செய்து, இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.