10ம் வகுப்பில் ஃபெயில் ஆன மாப்பிள்ளை - திருமணத்தில் நோ சொன்ன மணமகள்!
10ம் வகுப்பு பெயில் ஆன மாப்பிள்ளையை மணமகள் திருமணம் செய்ய மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மணமகன் ஃபெயில்
உத்தரப்பிரதேசம், சுல்தான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பட்டப்படிப்பு முடித்த 28 வயது பெண்ணுக்கும், 30 வயது இளைஞருக்கும் திருமணத்திற்கு முடிவு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், மாப்பிள்ளை 10-ம் வகுப்பு தோல்வி அடைந்தாக கூறப்படுகிறது. திருமண நிச்சயத்திற்கு முன் இது மணமகளுக்கு தெரியவராமல் இருந்துள்ளது.
மறுத்த மணமகள்
தொடர்ந்து திருமணத்தன்று இது குறித்து மணப்பெண்ணிற்கு தெரிய வரவே தான் பட்டப்படிப்பு முடித்துள்ளதால் 10-ம் வகுப்பு பெயில் அடைந்த இந்த மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மணமகளிடம் பல மணி நேரமாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால் எதுவும் பலனளிக்கவில்லை. எனவே திருமணம் நின்றுள்ளது.
மேலும், வரதட்சனையாக கொடுக்கப்பட்ட நகை, பணம் ஆகியவற்றை மணப்பெண் குடும்பத்தினரிடம் மணமகன் குடும்பத்தினர் திரும்ப ஒப்படைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.