திருமணத்தில் நடனமாட மறுத்த மணப்பெண் - மண்டையை உடைத்த உறவினர்கள்!
மணமகள் நடனம் ஆடாததால் குடும்பத்தினரிடையே பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது.
வரவேற்பில் நடனம்
ஆந்திரா, கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியம். இவருக்கும் பச்சிளம் பகுதியைச் சேர்ந்த பூஜ்ஜிதா என்ற பெண்ணுக்கும் திருமண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அன்று இரவு திருமண மண்டபத்தில் மணமக்களின் உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் குவிந்திருந்தனர். திருமண வரவேற்பின் போது பாட்டுக் கச்சேரியுடன் ஆடல் பாடல் நிகழ்ச்சி வைக்கப்பட்டிருந்ததால் திருமண மண்டபம் திருவிழாக் கோலமாகக் காணப்பட்டது.
பயங்கர மோதல்
இந்நிலையில், மணமகன் வீட்டார் மணப்பெண்ணை சினிமா பாடலுக்கு நடனமாட கூறியுள்ளனர். ஆனால் மணப்பெண்ணுக்கு தனக்கு நடனமாடத் தெரியாது எனத் தெரிவித்துள்ளார். மணமகள் வீட்டாலும் பெண்ணுக்கு நடனமாடத் தெரியாது எனத் தெரிவித்துள்ளனர்.
இதனால் இரு வீட்டாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. அங்கிருந்து நாற்காலிகளை தூக்கி வீசி தாக்கிக் கொண்டனர். இந்த தகராறில் உறவினரான பெண் ஒருவருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியுள்ளது. மேலும் 3 பேர் கயமடைந்துள்ளனர். தகவலறிந்து வந்த போலீஸாரிடம் ஒருவர் மீது ஒருவர் புகாரளிக்க குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.