இந்த வேலையெல்லாம் வச்சுக்காத.. சாய் பல்லவியிடம் கடுப்பான செல்வராகவன்!

Sai Pallavi Tamil Cinema Tamil Actors Tamil Actress Actress
By Jiyath Jun 19, 2024 06:18 PM GMT
Report

இயக்குநர் செல்வராகவன் குறித்து நடிகை உமா பத்மநாபன் பேசியுள்ளார். 

NGK

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா - சாய் பல்லவி நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படம் NGK. இந்த படத்தில் ரகுல் ப்ரீத் சிங், தேவராஜ், நிழல்கள் ரவி, உமா பத்மநாபன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

இந்த வேலையெல்லாம் வச்சுக்காத.. சாய் பல்லவியிடம் கடுப்பான செல்வராகவன்! | Unknown Incident Of Sai Pallavi And Selvaraghavan

மேலும், யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் NGK படம் உருவாகியிருந்தது. இந்நிலையில் இந்த படத்தில் சூர்யாவுக்கு தாயாக நடித்த உமா கலந்துகொண்ட நேர்காணல் ஒன்றில் "செல்வராகவன் படம் என்றால் ஸ்ட்ரிக்ட்தான். பொதுவாக படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் ஒரு ஷாட் முடிந்ததும் இயக்குநரிடம் இருக்கும் மானிட்டரை வந்து பார்ப்பார்கள்.

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியான பிரியா அட்லி..? வைரலாகும் புகைப்படம்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியான பிரியா அட்லி..? வைரலாகும் புகைப்படம்!

சாய் பல்லவி 

ஆனால், அதெல்லாம் செல்வராகவன் ஷூட்டிங்கில் கிடையாது. பெரிய நடிகராக இருந்தாலும் மானிட்டரை பார்க்க முடியாது. அப்படி ஒருமுறை NGK பட ஷூட்டிங்கில் சாய் பல்லவி ஒரு காட்சியை நடித்து முடித்துவிட்டு,

இந்த வேலையெல்லாம் வச்சுக்காத.. சாய் பல்லவியிடம் கடுப்பான செல்வராகவன்! | Unknown Incident Of Sai Pallavi And Selvaraghavan

எப்படி இருக்கிறோம் என்பதை பார்க்க மானிட்டரை எட்டி பார்த்தார். அதனை கவனித்த செல்வராகவன், 'என்ன இங்க எட்டி பார்க்குற.. அந்த வேலை எல்லாம் இங்க வெச்சுக்கக்கூடாது.. போ' என்று சொல்லிவிட்டார்" என்று தெரிவித்துள்ளார்.