சிவகார்த்திகேயனுக்கு ஜோடியான பிரியா அட்லி..? வைரலாகும் புகைப்படம்!
நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் பிரியா அட்லியின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
குறும்படம்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்த இவர், மெரினா என்ற படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து பல வெற்றிப்படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தார்.

இதனிடையே கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் சிவகார்த்திகேயன் ’360 டிகிரி’ என்ற குறும்படத்தில் நடித்திருந்தார். இந்த குறும்படத்தில் அவருக்கு ஜோடியாக இயக்குநர் அட்லியின் மனைவி பிரியா நடித்துள்ளார்.
பிரியா அட்லி
இந்த குறும்படத்தில் அவர்கள் இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதன் மூலம், ஏற்கனவே சில சீரியல்களில் நடித்திருக்கும் பிரியா அட்லி,

சிவகார்த்திகேயனுடன் குறும்படத்திலும் நடித்துள்ளார் என்பது பலருக்கும் தெரிய வந்துள்ளது. மேலும், சிவகார்த்தியேகன் நடிப்பில் உருவாகி வரும் அமரன் திரைப்படம் வரும் செப்டம்பர் 27-ம் தேதி ரிலீசாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாதுகாப்பற்ற முறையில் அமைக்கப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த நாய்கள் IBC Tamil
செவ்வாய் - சனி கேந்திர யோகம்: செப்டம்பர் மாதத்தின் முதல் நாளே அதிர்ஷ்ட யோகம் பெறும் ராசிகள்! Manithan