பொண்ணுங்ககிட்ட ஏன் அத எதிர்பாக்குறீங்க? கடுப்பான ரகுல் பிரீத் சிங்!

Rakul Preet Singh Tamil Cinema Tamil Actors Tamil Actress Actress
By Jiyath Mar 23, 2024 04:00 PM GMT
Report

ஆடைக் கட்டுப்பாடு குறித்து நடிகை ரகுல் ப்ரீத் சிங் பேசியுள்ளார்.

ரகுல் பிரீத் சிங்

தடையறத் தாக்க என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரகுல் பிரீத் சிங். தொடர்ந்து என்னமோ ஏதோ, தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்.ஜி.கே, அயலான் ஆகிய படங்களில் நடித்தார்.

பொண்ணுங்ககிட்ட ஏன் அத எதிர்பாக்குறீங்க? கடுப்பான ரகுல் பிரீத் சிங்! | Actress Rakul Preet Singh About Dress Code

இவர் தயாரிப்பாளர் ஜாக்கி பாக்னானி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட ரகுல் பிரீத் சிங் "நமது இந்திய சமுதாயத்தில் திருமணம் பற்றி மிகப்பெரிய கட்டுப்பாடுகளை வைத்திருக்கிறோம்.

பிரபல மாடல் அழகியை 2-வது திருணம் செய்த 'சொமேட்டோ' CEO - யார் அவர்?

பிரபல மாடல் அழகியை 2-வது திருணம் செய்த 'சொமேட்டோ' CEO - யார் அவர்?

காலம் மாறிவிட்டது

ஒருவருடைய வாழ்வில் நடைபெறும் மிக இயல்பான விஷயமாக திருமணத்தைப் பார்க்க வேண்டும். திருமணத்திற்குப் பிறகு ஆண்கள் இப்படித்தான் உடை அணிய வேண்டும் என்று எதாவது கட்டுப்பாடுகளும் நிபந்தனைகளும் இருக்கிறதா?

பொண்ணுங்ககிட்ட ஏன் அத எதிர்பாக்குறீங்க? கடுப்பான ரகுல் பிரீத் சிங்! | Actress Rakul Preet Singh About Dress Code

அப்படி இருக்கும் போது பெண்களிடம் மட்டும் அதை ஏன் எதிர்பார்க்கிறீர்கள்? காலம் மாறிவிட்டது. அனைவருக்கும் என்ன பிடிக்கிறதோ அதை செய்கிறார்கள்" என்றார்.