மசோதாக்களுக்கு ஒப்புதல்; முதல்வர் மு.க.ஸ்டாலின்தான் இனி.. ஆளுநருக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம்
ஆளுநர் ரவி நிறுத்திவைத்த 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆளுநர் மீதான வழக்கு
தமிழக அரசால் நிறைவேற்றப்பட்டு அனுப்பபடும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்பதல் அளிக்காமல் காலம் தாழ்த்துவது கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ளது.
குறிப்பாக பல்கலைக்கழக வேந்தராக முதல்வரை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றியுள்ளது. ஆனால், அதனை ஆளுநர் ஆர்.என் ரவி இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது.
தற்போது இந்த வழக்கில், ஆளுநர் ரவி நிறுத்தி வைத்த, திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்ததாக கொள்ளப்படும். ஆளுநர் அனுப்பிய மசோதாக்கள் மீதான ஜனாதிபதியின் நடவடிக்கையும் செல்லாது.
அரசமைப்பு சாசனம் 200-வது பிரிவின் படிதான் ஆளுநர் செயல்பட வேண்டும்.
உச்சநீதிமன்ற தீர்ப்பு
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து ஆளுநர்கள் ஒரு மாதத்திற்குள் முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. அமைச்சரவை ஆலோசனைபடியே ஆளுநர்கள் செயல்பட வேண்டும். ஆளுநருக்கு என பொதுவாக தனி விருப்புரிமை இருக்க முடியாது.
மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்ததை ஏற்க முடியாது. மசோதாக்களுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பதே பல்வேறு தீர்ப்புகளில் உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், தமிழ்நாடு பல்கலைக்கழக சட்டத் திருத்த (2வது) மசோதா உட்பட 10 மசோதாக்களுக்கு உச்சிநீதிமன்றம் ஒப்புதல் அளித்திருப்பதால், ஆளுநருக்கு பதிலாக மாநில முதல்வர் மு.க.ஸ்டாலின் இனி பல்கலைக்கழகங்களின் வேந்தராக செயல்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.