சீமான் ஆஜராகாவிட்டால் பிடிவாரண்ட் - நீதிமன்றம் உத்தரவு
சீமான் இன்று நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
வருண்குமார் வழக்கு
திருச்சி சரக டி.ஐ.ஜி வருண் குமார், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த போது அவர் குறித்தும், அவருடைய மனைவியும் புதுக்கோட்டை எஸ்பியுமான வந்திதா பாண்டேவையும்
எக்ஸ் வலைதள பக்கத்தில் இருந்து ஆபாசமாக விமர்சித்து சீமானின் ஆதரவாளர்கள் அவதூறு பரப்பியதாக வருண்குமார் புகார் அளித்திருந்தார். தொடர்ந்து தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த சீமான் முயற்சிப்பதாகவும் திருச்சி 4ஆவது குற்றவியல் நீதிமன்றத்தில் வருண்குமார் வழக்கு தொடர்ந்திருந்தார்.
சீமான் ஆஜர்?
மேலும், நஷ்ட ஈடு கோரியிருந்த வழக்கின் விசாரணைக்கு வருண்குமார் நீதிமன்றத்திற்கு நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். இந்த வழக்கு விசாரணை முடிவில் நீதிமன்றத்தில் சீமான் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டிருந்த நிலையில், சீமான் இதுவரை ஆஜராகவில்லை.
இந்நிலையில், இந்த வழக்கு திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மாலை 5 மணிக்குள் நீதிமன்றத்தில் சீமான் ஆஜராக வேண்டும். இல்லாவிட்டால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
ஆனால் சீமான் தரப்பு வழக்கறிஞர் அவர் இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். அதற்கு நீதிபதி, சீமான் இன்று காலை 10.30 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். இல்லாவிட்டால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என உத்தரவிட்டுள்ளனர்.

viral video: குழாய்க்குள் மறைந்திருந்த பாம்புகளை நுட்பமாக முறையில் பிடித்த நபர்... பகீர் காட்சி! Manithan
