தேர்தல் வந்துட்டா மட்டும் அவர்களுக்கு கச்சத்தீவு மீது காதல் வந்துவிடும் - சாடிய சீமான்

Tamil nadu ADMK DMK Sri Lanka Seeman
By Sumathi Apr 05, 2025 04:13 AM GMT
Report

தேர்தல் வந்துவிட்டால் திமுக, அதிமுகவுக்கு கச்சத்தீவு மீது காதல் வந்துவிடும் என சீமான் தெரிவித்துள்ளார்.

சீமான்

மதுரை காளவாசல் பகுதியில், நாம் தமிழர் கட்சியின் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, குமரி மாவட்ட நிர்வாகிகளுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

seeman

அதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு, பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில்,

கச்சத்தீவு மீது காதல்

”கச்சத்தீவு மீட்பு விவகாரம் தற்போது பேசும்பொருளாக மாறி இருக்கிறது. இந்த விவகாரத்தை, நாங்கள் வித்தியாசமாக பார்க்கிறோம். அதாவது, கொள்ளையடிப்பது, திருடுவது போன்ற குற்றங்கள் செய்யும் ஒருவன், கோவில் திருவிழா வந்தவுடன் காப்புக்கட்டி ஒரு வாரம் விரதம் இருப்பான்.

மோடி வருகைக்காக மசூதியை மூடுவதுதான் திராவிட மாடலா? சரமாரியாக சாடிய சீமான்

மோடி வருகைக்காக மசூதியை மூடுவதுதான் திராவிட மாடலா? சரமாரியாக சாடிய சீமான்

அதன்பின்னர் திடீரென அவன் சாமியும் ஆடுவான். அந்த சமயத்தில் அவன் செய்த குற்ற செயல்களை எல்லாம் புனிதப்படுத்திக் கொள்வான். அதுபோலத்தான் இந்த கச்சத்தீவு மீட்பு குறித்த பேச்சும் உள்ளது.

அது கோவில் திருவிழா, இது தேர்தல் திருவிழா. தேர்தல் வந்துவிட்டால் திமுக, அதிமுக, பாஜக, பாமக போன்ற கட்சிகளுக்கு திடீரென கச்சத்தீவு மீது காதல் வந்துவிடும்” எனத் தெரிவித்துள்ளார்.