சைதை துரைசாமிக்கு வேலைவெட்டி இல்லை; செங்கோட்டையன்தான் முன்னோடி - கே.பி.முனுசாமி தாக்கு
சைதை துரைசாமி வேலை வெட்டி இல்லாமல் இருப்பதாக கே.பி.முனுசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
சைதை துரைசாமி
அதிமுக மூத்த தலைவர் சைதை துரைசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், அதிமுகவினர் ஒன்றுபட வேண்டும். பாஜகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதற்கு அதிமுக தரப்பில் கடுமையான எதிர்வினையாற்றப்பட்டது. இந்நிலையில் அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
கே.பி.முனுசாமி தாக்கு
சைதை துரைசாமிக்கு எதிர்ப்பு வலுப்பதற்குக் காரணம் களத்தில் இருக்கும் அதிமுக தொண்டர்கள். கட்சிக்காக அர்ப்பணித்து உழைக்கும் அதிமுகவினரை வேலை வெட்டி இல்லாத சைதை துரைசாமி விமர்சிக்கிறார். அந்த கோபத்தின் வெளிப்பாடு தான் அதிமுகவினரின் எதிர்வினை.
செங்கோட்டையன் எங்கள் கழகத்தின் முன்னோடி. அவர் அவருடைய பணிகளை சிறப்பாகச் செய்து கொண்டிருக்கிறார். தேவையில்லாமல் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக சில சந்தர்ப்பவாதிகள் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார்கள்.
செங்கோட்டையன் டெல்லி சென்று நிதி அமைச்சரை பார்த்தார். அவ்வளவுதான். சிலர் தான் கண், மூக்கு வைத்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.