PF-ல் முக்கிய மாற்றம் - ஊழியர்களுக்கு காத்திருக்கும் குட் நியூஸ்!
பிஎஃப் விதிகளில் முக்கிய மாற்றங்கள் அறிவிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
வருங்கால வைப்பு நிதி
திட்டம் 1952ன் படி, எந்த ஒரு நிறுவனத்தில் தனி நபருக்கு மாதம் ரூ.15 ஆயிரத்திற்கு மேல் சம்பளம் இருந்தால், அந்த ஊழியர் வருங்கால வைப்பு நிதி (பிஎஃப்) கணக்கில் சேர்க்கப்படுகிறார்.
அடிப்படை ஊதியம், அகவிலைப்படி, தக்கவைப்பு படிகள் போன்றவற்றை உள்ளடக்கிய அவர்களது சம்பளத்தில் 12 சதவீதத்தை பங்களிக்க வேண்டும். இதேபோல், முதலாளியும் சம்பளத்தில் 12 சதவீதத்தை பிஎஃப் நிதிக்கு வழங்க வேண்டும்.
முக்கிய மாற்றம்?
ரூ.15,000 க்கு மேல் சம்பளம் உள்ள ஊழியர்களுக்கு PF கணக்கு தொடங்க வேண்டும். இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை ஜூலை 23ஆம் தேதி தாக்கல் செய்யவுள்ளார்.
இதில் இந்த முறை வருங்கால வைப்பு நிதியின் (பிஎஃப்) வரம்பு ரூ. 15,000 முதல் ரூ. 25,000 வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. பத்தாண்டுகளுக்கு முன், செப்டம்பர் 2014ல், பிஎஃப் வரம்பு ரூ.15,000 ஆக மாற்றப்பட்டது.
பிஎஃப் கணக்கில் ஒவ்வொரு மாதமும் பணம் டெபாசிட் செய்யப்படாவிட்டால், அவை செயலற்ற கணக்குகளாக மாற்றப்படும். அந்த வகையில், மார்ச் 2022 வரை செயல்படாத கணக்குகளில் உள்ள தொகை ரூ.4962.70 கோடி என மத்திய அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.