பிஎஃப் அட்வான்ஸ் வாங்கணுமா? 3 நாளில் பணம் கையில்.. எப்படி தெரியுமா?
பிஎஃப்., அட்வான்ஸ் இனி 3 நாளில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பி.எப். அட்வான்ஸ்
பிஎஃப் தொகையை அவசர தேவைகள், மருத்துவ தேவைகளுக்கு இடைப்பட்ட நேரத்தில் கூட எடுத்துக்கொள்ள முடியும். தற்போது, இதற்கான முறை தானியங்கி நடைமுறையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் விண்ணப்பித்த 3 நாளில் பிஎஃப் ., பணம் கிடைக்கும். இந்நிலையில், ஆன்லைன் பரிவர்த்தனைகள், அட்வான்ஸ் எடுப்பது, பென்ஷன் க்ளைம் அனைத்தையும் வீட்டில் இருந்தபடியே செய்யமுடியும்.
உமாங்
இதற்காக, உமாங் (UMANG) என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், பிஎஃப் கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது, மாதம் மாதம் சரியாக பணம் செலுத்தப்படுகிறதா, பணம் எப்போது கிடைக்கும் என்பதை அறிந்துக்கொள்ள முடியும்.
மேலும், UAN எண்ணை பதிவிட்டு, OTP-யை கொடுத்து தொகையை க்ளைம் செய்யலாம். இந்த செயல்முறையை முடிப்பதற்கு இரண்டு நிமிடங்களுக்கும் குறைவாகவே ஆகும்.
ஆனால், உங்கள் வங்கி கணக்கிற்கு பணம் வர 10 முதல் 15 நாட்கள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.