பிஎஃப் பணம் கேட்போருக்கு நிராகரிப்பு; எதனால் தெரியுமா? அவசியம் தெரிஞ்சுக்கோங்க!

Money
By Sumathi Feb 26, 2024 08:04 AM GMT
Report

பிஎஃப் பணம் கேட்போருக்கு தராமல் நிராகரிப்பது அதிகரித்து வருகிறது.

வருங்கால வைப்பு நிதி

பணியாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) என்பது இந்தியாவில் ஒரு குறிப்பிடத்தக்க ஓய்வூதிய சேமிப்பு திட்டமாக இருந்து வருகிறது. இந்த வைப்பு நிதிக்கு பணிபுரியும் நிறுவனமும், பணியாளரும் சமமான தொகையை வழங்குகிறார்கள்.

epfo

பணியாளர் ஓய்வுபெற்றபின் இந்த பணம் அவரது கணக்கில் வரவு வைக்கப்படும். இது ஒரு குறிப்பிட்ட அளவிலான நிதி பாதுகாப்பை ஊழியருக்கு அளிக்கிறது. இந்த வைப்பு நிதி தொகையிலிருந்து முன் பணத்தை எடுத்துக் கொள்வதற்கு கொரோனா பெருந்தொற்று சமயத்தில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வாரியம் அனுமதி அளித்திருந்தது.

தொடரும் சிக்கல் 

அதனைத் தொடர்ந்து, தற்போது வரை 2.2 கோடி சந்தாதாரர்கள் பிஎஃப் தொகையிலிருந்து முன் பணத்தை எடுத்துள்ளனர். ஆனால், சமீப காலமாக பிஎஃப் பணம் கேட்போருக்கு தராமல் நிராகரிப்பது அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதற்கு காரணமாக ஊழியர்கல் செய்யும் சில தவறுகள் சுட்டிக்காட்டப்படுகிறது.

pf

விண்ணப்பிக்கும் பலர் செய்யும் தவறு என்ன வென்றால், ஒரே பிஎப் கணக்கிற்கு பணத்தை மாற்றாமல் வைத்துள்ளனர். ஒருவர் தான் வேலை செய்யும் நிறுவனத்தை விட்டு விலகி இரண்டாவது நிறுவனத்தில் சேர்ந்த உடன் பிஎஃப் கணக்கை இதற்கு மாற்ற வேண்டும்.

இனி பி.எஃப் முன்பணம் எடுக்க முடியாது - அதிர்ச்சியில் ஊழியர்கள்!

இனி பி.எஃப் முன்பணம் எடுக்க முடியாது - அதிர்ச்சியில் ஊழியர்கள்!

கண்டிப்பாக ஏற்கனவே வேலை செய்த நிறுவனம் பிஎப் கணக்கில் நீங்கள் வேலையைவிட்டு நின்ற தேதியை குறிப்பிட வேண்டும். அப்படி மாற்றிய பின்னர் நீங்கள் பிஎப் அட்வான்ஸ் தொகை பெற விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்தின் இறுதியில் பிஎப்பில் உள்ள வங்கி கணக்கின் செக் லீப்பை பென்சிலால் அடித்து அதை இணைக்க வேண்டும்.

அப்படி இணைத்தால் உங்கள் விண்ணப்பம் 20 நாளில் பரிசீலனை செய்யப்பட்டு 20 முதல் 25 நாளில் உங்கள் வங்கி கணக்கில் பிஎப் அட்வான்ஸ் தொகை சேர்ந்துவிடும். அதன்பின்னர் நீங்கள் மொத்தமாக பிஎப் கணக்கில் இருந்து பணத்தை எளிதாக எடுக்கலாம். 20 நாளில் பணம் உங்கள் கணக்கிற்கு வந்துவிடும்.