தாஜ்மஹாலை பார்க்க வந்த வெளிநாட்டு பயணிக்கு கொரோனா - தலைமறைவால் சிக்கல்!
தாஜ்மஹாலைப் பார்வையிட வந்த ஒரு சுற்றுலாப் பயணிக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் தலைமறைவாகியுள்ளார்.
சுற்றுலாப் பயணி
சீனாவில் புதிதாக பரவி வரும் பிஎஃப் 7 வகை கொரோனா தொற்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதனால் அங்கு கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தொற்று இந்தியாவில் பரவாமல் இருக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு வரும் பயணிகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டால் தனிமைப்படுத்தப்படுகின்றனர். இந்நிலையில், டிசம்பர் 26 அன்று தாஜ்மஹாலைப் பார்வையிடுவதற்காக வந்த
தலைமறைவு
அர்ஜென்டினாவை சேர்ந்த சுற்றுலா பயணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் தலைமறைவாகியுள்ளார்.
அதனையடுத்து அவரை தேடும் பணியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.