15 நாள்தான்.. இல்லையேல் சீல் தான் - தாஜ்மஹால் நிர்வாகத்துக்கு பரபர நோட்டீஸ்!

Delhi
By Sumathi Dec 20, 2022 07:03 AM GMT
Report

குடிநீர் வரி மற்றும் சொத்து வரி செலுத்தக் கோரி தாஜ்மஹால் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தாஜ்மஹால் 

இந்திய தொல்லியல் துறைக்கு ஆக்ரா முனிசிபல் கார்ப்பரேஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், ரூ. 1.4 லட்சம் சொத்துவரி மற்றும் ரூ.1 கோடி குடிநீர் வரி செலுத்தக்கோரி குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 15 நாட்களில் வரிகளை செலுத்தாவிட்டால்

15 நாள்தான்.. இல்லையேல் சீல் தான் - தாஜ்மஹால் நிர்வாகத்துக்கு பரபர நோட்டீஸ்! | Notices Sent To Taj Mahal And Agra Fort

தாஜ்மஹாலுக்கு சீல் வைக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய தொல்லியல் கண்காணிப்பு ஆய்வாளர் ராஜ்குமார் படேல் தெரிவிக்கையில், நினைவு சின்னங்களுக்கு சொத்து வரி விதிக்கப்படாது.

வரி செலுத்த நோட்டீஸ்

வணிகரீதியாக பயன்படுத்தாத தண்ணீருக்கு வரி செலுத்த வேண்டியதில்லை. தாஜ்மஹால் வளாகத்திற்குள் பசுமையை பராமரிக்க தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. தண்ணீர் தொடர்பான அறிவிப்புகள் மற்றும்

தாஜ்மஹாலுக்கான சொத்து வரி முதல்முறையாக விதிக்கப்பட்டுள்ளது. இது தவறுதலாக அனுப்பப்பட்டிருக்கலாம்” என தெரிவித்துள்ளார்.