தாஜ்மஹாலில் மாயமாகும் விலையுயர்ந்த கற்கள் - பரபர தகவல்!
தாஜ்மஹாலில் விலை மதிப்பற்ற கற்கள் காணாமல் போவதாக தகவல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தாஜ்மஹால்
உலக அதிசயங்களில் ஒன்றாக தாஜ்மஹால் திகழ்கிறது. இங்கு சுற்றுலாப்பயணிகள் நாள் ஒன்றுக்கு பல்லாயிரக் கணக்கானோர் வந்து செல்கின்றனர். இந்த தாஜ் மஹால், திபெத் மற்றும் சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து பளிங்கி கற்கள் கொண்டு வரப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த கற்களில் வெள்ளை நிற கற்கள் அதிக விலை உயர்ந்தவை. இந்நிலையில், ஆண்டுதோறும் தாஜ்மஹாலில் உள்ள விலையுயர்ந்த கற்கள் காணாமல் போவதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில், இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
கற்கள் மாயம்
இதற்கு பதிலளித்துள்ள தகவல் ஆணையம், இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் தாஜ்மஹாலில் உள்ள மொசைக்குளில் காணாமல் போன விலை மதிப்பற்ற கற்களை சீரமைக்கும் பணிகள் நடைபெறுவதாக தெரிவித்துள்ளார்.
ஏறத்தாழ 2 கோடியே 50 லட்ச ரூபாய் மதிப்பில் புதிய கற்களை பதிக்கும் பணியை மேற்கொள்ள உள்ளதாகவும் அதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தாஜ்மஹாலில் உள்ள முக்கிய குவிமாடம், மும்தாஜ், ஷாஜகான் கல்லறை மற்றும் ராயல் கேட் உள்ளிட்ட இடங்களில் இருந்து கற்கள் காணாமல் போனதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.