தாஜ் மகாலுக்குள் இந்து சிலைகள் பூட்டிய அறைகளை திறக்க சொல்லி உயர்நீதிமன்றத்தில் பாஜக மனு தாக்கல்..!
தாஜ் மகாலிலுள்ள 22 அறைகள் மூடப்பட்டு உள்ளன என கூறப்படுகிறது. மேலும், அந்த அறைகளுக்குள் இந்து தெய்வங்களின் சிலைகள் மற்றும் கல்வெட்டுகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளன என கூறப்படுகிறது.
இந்த கூற்றை தொல்லியல் ஆசிரியர்கள் பலர் ஆதரிக்கின்றனர் என்பது சிறப்பம்சம். மேலும் அங்கு லிங்கம் இருக்கலாம் என்றும், அதில் சிவன் கோயில் சம்பந்தப்பட்ட சிலைகள் இருக்கலாம் என்றும் அவர்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை உள்ளது குறிப்பிடதக்கது.
இந்த கூற்றின் உண்மைதன்மையை கண்டறிய இந்திய தொல்லியல் துறை சார்பாக குழு ஒன்றை அமைத்து அதனை ஆய்வு செய்ய வேண்டும் என்று உயர் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ கிளையில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில், ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலில் இந்து சிலைகள் மற்றும் கல்வெட்டுகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய 20 அறைகளை திறக்க இந்திய தொல்லியல் துறைக்கு (ஏஎஸ்ஐ) உத்தரவிடக் கோரப்பட்டுள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் (BJP) அயோத்தி மாவட்ட ஊடகப் பொறுப்பாளர் டாக்டர் ரஜ்னீஷ் சிங் தாக்கல் செய்த இந்த மனு இன்னும் விசாரணைக்கு வரவில்லை.
மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ருத்ர விக்ரம் சிங் நீதிமன்றத்தில் வாதாடவுள்ளார். இது குறித்து வழக்கு தொடர்ந்த டாக்டர் ரஜ்னீஷ் சிங் பேசுகையில்,
"தாஜ்மஹால் தொடர்பாக பழைய சர்ச்சை உள்ளது. தாஜ்மஹாலில் உள்ள சுமார் 20 அறைகள் பூட்டப்பட்டுள்ளன, யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை.
இந்த அறைகளில் இந்து கடவுள்களின் சிலைகள் மற்றும் புனித நூல்கள் இருப்பதாக நம்பப்படுகிறது, "என்று கூறினார்.
மேலும், "உண்மைகளைக் கண்டறிய இந்த அறைகளைத் திறக்க ஏஎஸ்ஐக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் நான் மனு தாக்கல் செய்துள்ளேன்.
இந்த அறைகளைத் திறந்து அனைத்து சர்ச்சைகளுக்கும் ஓய்வு கொடுப்பதில் எந்தத் தீங்கும் இல்லை"என்று சிங் கூறினார்.
மேலும், இவர் 2020 இல் மத்திய கலாச்சார அமைச்சகத்திடம் தாஜ் மகாலில் உள்ள அறைகள் பற்றிய தகவல்களைக் கோரி RTI தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடதக்கது.