பிஎஃப் கணக்கு இருக்கா? ரூ.50 ஆயிரம் போனஸ் - இதை அவசியம் நோட் பண்ணுங்க!
பிஎஃப் கணக்கு குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
பிஎஃப் கணக்கு
ஊழியர்கள் ஒவ்வொரு மாதமும் தங்கள் ஊதியத்திலிருந்து குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்வதன் மூலம், ஓய்வுக்கு பிறகு அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும்.
இதன்படி, ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) முக்கிய பங்கு வகிக்கிறது. ஊழியர்கள் பணியின் போதும் இந்த பணத்தை எடுத்துக்கொள்ளலாம். EPFO தொடர்பான சில விதிகளில் ஒன்று லாயல்டி-கம்-லைஃப்.
லாயல்டி-கம்-லைஃப்
இதன் மூலம் பிஎஃப் கணக்கு வைத்திருக்கும் ஊழியர்கள் ரூ.50,000 வரை இலவசமாக பெறலாம். பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாறும்போதும் அதே பிஎஃப் கணக்கில் பங்களிக்க வேண்டும்.
இவ்வாறு தொடர்ந்து 20 ஆண்டுகள் ஒரே பிஎஃப் கணக்கில் பங்களித்த பிறகு லாயல்டி-கம்-லைஃப் திட்டத்தின் பலன்களைப் பெற தகுதி உடையவர்களாக மதிப்பிடப்படுகின்றனர். இந்த திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தொடர்ந்து, 20 ஆண்டுகளாக ஒரே பிஎஃப் கணக்கை பயன்படுத்தி வருபவர்களுக்கு கூடுதலாக ரூ.50,000 கிடைக்கும்.
அடிப்படை சம்பளம் ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை உள்ளவர்கள் ரூ.40,000 மற்றும் 10,000-க்கு மேல் சம்பளம் வாங்குபவர்கள் ரூ.50,000 பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.