ராகுலில் எதிர்க்கட்சி தலைவராக இருப்பது துரதிர்ஷ்டம் - மத்திய அமைச்சர் பரபரப்பு பேட்டி!
ராகுல் காந்தி எதிர்க்கட்சி தலைவராக உள்ளது துரதிர்ஷ்டமான நிகழ்வு என மத்திய அமைச்சர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சக்கர வியூகம்
டெல்லி : நாடாளுமன்றத்தில் சக்கர வியூகம் குறித்த தனது பேச்சு 2 பேருக்கு பிடிக்கவில்லை . சக்கர வியூகம் குறித்த தனது பேச்சு பிடிக்காததால் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தலாம் என்று தகவல் கிடைத்துள்ளது. அமலாக்கத்துறையின் வருகைக்காக தேநீர் மற்றும் பிஸ்கட்டுடன் காத்திருக்கிறேன் என ராகுல் காந்தி என தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.
அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், ராகுல் காந்தி எதிர்க்கட்சி தலைவராக உள்ளது துரதிர்ஷ்டமான நிகழ்வு என மத்திய அமைச்சர் கிரி ராஜ் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
ரெய்டு
இந்த சம்பவம் தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் ,'' நாடாளுமன்றத்தில் ராகுல் பொய் பேசுகிறார். வெளியே, அவர் தவறான தகவல்களை பரப்புகிறார்.அரசியலில் அவர் எதிர்க்கட்சி தலைவராக இருப்பது நாட்டின் துரதிர்ஷ்டம் என்று நான் நம்புகிறேன்.
அரசியலமைப்பு சட்டத்தை அழிக்க முயற்சி நடந்து வருவதாக கூறி வந்த ராகுல், தற்போது அந்த முயற்சியில் தான் ஈடுபட்டுள்ளார் . ஆனால் நாடாளுமன்றத்தில் விவாதத்தின் போது அனுராக் தாக்கூர் எழுப்பிய, கேள்விகளுக்கு அவர் இன்னும் பதிலளிக்கவில்லை என்று கூறினார்.