பிரதமர் மோடி தான் அரசன்; நான் உங்களது மகன் மற்றும் சகோதரன் - ராகுல் காந்தி!
நான் ஒருபோதும் அரசனாக இருக்க விரும்பவில்லை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல்
நாடு முழுவதும் 5 கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில் 6 மற்றும் 7-ம் கட்ட வாக்குப்பதிவு வரும் மே 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
இதனால் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் "ஹரியானா மாநிலம் மகேந்தர்கரில் காங்கிரஸ் தேர்தல் பேரணி நடைபெற்றது. இதில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கலந்து பெற்றார்.
அரசன் கிடையாது
அப்போது பேசிய அவர் "நான் அரசன் இல்லை, பிரதமர் மோடி தான் அரசன். நான் ஒருபோதும் அரசனாக இருக்க விரும்பவில்லை. நான் உங்களது மகன் மற்றும் சகோதரன் மட்டுமே, அரசன் கிடையாது" என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி ராகுல் காந்தியைக் குறிப்பிடும்போது இளவரசர் என்று கூறுவதை வழக்கமாக வைத்துள்ளார். இதனால் ராகுல் காந்தி, தான் அரசன் இல்லை என்றும் உங்களது மகன் மற்றும் சகோதரன் மட்டுமே என்றும் கூறியுள்ளார்.