மக்களவை தேர்தல் 2024 - தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நிறைவு!
மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழ்நாட்டில் மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.
மக்களவை தேர்தல்
மக்களவை தேர்தல் 2024 நாடு முழுவதும் ஏப்ரல் 19-ம் தேதியான இன்று தொடங்கி ஜூன் மாதம் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.
காலை முதலே பொதுமக்கள், வேட்பாளர்கள், அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் என பலரும் தங்கள் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களித்து வந்தனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் தற்போது வாக்கு எந்திரங்களுக்கு சீல்வைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஒருசில வாக்குச்சாவடிகளில் 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் மாலை 5 மணி நிலரவப்படி 63.20 சதவிகிதம் வாக்குப்பதிவாகியுள்ளது.
மாவட்ட வாரியாக 5 மணி வரையிலான வாக்குப்பதிவு
தருமபுரி - 67.52%
நாமக்கல் - 67.37%
ஆரணி - 67.34%
கள்ளக்குறிச்சி - 67.23%
கரூர் - 66.91%
சிதம்பரம் - 66.64%
பெரம்பலூர் - 66.56%
திருவண்ணாமலை - 65.91%
சேலம் - 65.86%
அரக்கோணம் - 65.61%
வேலூர் - 65.12%
விழுப்புரம் - 64.83%
கிருஷ்ணகிரி - 64.65%
ஈரோடு - 64.50%
திண்டுக்கல் - 64.34%
நாகை - 64.21%
கடலூர் - 64.10%
நீலகிரி - 63.88%
விருதுநகர் - 63.85%
மயிலாடுதுறை - 63.77%
பொள்ளாச்சி - 63.53%
தேனி - 63.41%
தென்காசி - 63.10%
தூத்துக்குடி - 63.03%
ராமநாதபுரம் - 63.02%
தஞ்சாவூர் - 63.00%
கன்னியாகுமரி - 62.82%
சிவகங்கை - 62.50%
திருச்சி - 62.30%
காஞ்சிபுரம் - 61.74%
திருவள்ளூர் - 61.59%
கோவை - 61.45%
திருப்பூர் - 61.43%
திருநெல்வேலி - 61.29%
மதுரை - 60.00%
ஸ்ரீபெரும்புதூர் - 59.82%
வடசென்னை - 59.16%
மத்திய சென்னை - 57.25%
தென்சென்னை - 57.04%