தந்தையை இழந்த துக்கத்தை தற்போது உணர்கிறேன் - ராகுல் காந்தி உருக்கம்
கேரளா சென்றுள்ள ராகுல் காந்தி தந்தையை இழந்த துக்கத்தை தற்போது உணர்கிறேன் என பேசியுள்ளார்.
வயநாடு நிலச்சரிவு
கேரள மாநிலத்தில் பெய்த கனமழையால் வயநாட்டில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டு 280 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 3 வது நாளாக மீட்பு பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் இன்று வயநாட்டுக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அங்கு உள்ள அதிகாரிகளிடம் மீட்பு பணி குறித்து கேட்டறிந்தனர்.
ராகுல் காந்தி
அப்பொழுது பேசிய ராகுல் காந்தி, இதன் பின் இருவரும் இணைந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினர். தற்போது , வயநாடு மக்களை பற்றி மட்டுமே கவலை கொண்டுள்ளேன். எனது தந்தை இறந்தபோது எந்தளவு துக்கம் அடைந்தேனோ, அதே துக்கத்தை தற்போது மீண்டும் அடைந்துள்ளேன். நான் என் தந்தையை மற்றும் தான் இழந்தேன். இங்கு பலர் தன் குடும்பத்தையே இழந்து நிற்கின்றனர்.
மிக வலி நிறைந்ததாக உள்ளது வயநாட்டின் நிலை. வயநாடு நிலச்சரிவு சம்பவத்தை வைத்து அரசியல் செய்ய விரும்பவில்லை. இது வயநாட்டுக்கு மட்டுமல்ல கேரளாவுக்கும் ஒட்டுமொத்தமான இந்தியாவுக்குமான துயரம் என பேசியுள்ளார்.
பிரியங்கா காந்தி வதேரா பேசுகையில், "நாங்கள் ஒரு நாள் முழுவதும் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தோம். இது ஒரு பெரிய சோகம். மக்கள் படும் வேதனையை நாம் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. நாங்கள் இங்கே உள்ளோம். இமாச்சலப் பிரதேசத்திலும் ஒரு பெரிய சோகம் நடந்துள்ளது. குறிப்பாக இப்போது தனியாக இருக்கும் குழந்தைகளுக்கு நாங்கள் எப்படி உதவுவது என்று திட்டமிட்டு வருகிறோம் என பேசினார்.