Thursday, May 1, 2025

ஹிமாச்சலபிரதேச நிலச்சரிவு; சரிந்து விழும் அடுக்குமாடி கட்டிடம் - நெஞ்சை பதற வைக்கும் வீடியோ

Himachal Pradesh
By Karthikraja 9 months ago
Report

ஹிமாச்சலபிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் அடுக்குமாடி கட்டிடம் சரிந்து விழும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

ஹிமாச்சல பிரதேசம்

கேரள மாநிலத்தில் பெய்த கனமழையால் வயநாட்டில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டு 280 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 3 வது நாளாக மீட்பு பணி நடைபெற்று வருகிறது.

himachal pradesh landslide

இந்நிலையில் ஹிமாச்சல பிரதேச மாநிலத்திலும் மேக வெடிப்பு ஏற்பட்டு கனமழை பெய்துள்ளதால், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் சிம்லாவில் சாலைகள் முற்றிலும் சேதமடைந்துள்ளது. 

970 கோடியில் கட்டப்பட்ட புதிய நாடாளுமன்றம் - ஒழுகும் மழை நீரை பக்கெட்டில் பிடிக்கும் அவலம்

970 கோடியில் கட்டப்பட்ட புதிய நாடாளுமன்றம் - ஒழுகும் மழை நீரை பக்கெட்டில் பிடிக்கும் அவலம்

அடுக்குமாடி கட்டிடம்

குலுவில் ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள அடுக்குமாடி கட்டிடம் ஒன்று சரிந்து அருகில் உள்ள பார்வதி நதியில் விழுந்துள்ளது. ஓடும் நீரில் சில நொடிகளில் அந்த கட்டிடம் காணாமல் போயுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த மேகவெடிப்பால் தற்போது வரை 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 40 க்கு மேற்பட்டோர் மயமாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இமாச்சலப் பிரதேசத்திற்கு வியாழன் முழுவதும் கனமழை முதல் மிக கனமழை வரை இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.