970 கோடியில் கட்டப்பட்ட புதிய நாடாளுமன்றம் - ஒழுகும் மழை நீரை பக்கெட்டில் பிடிக்கும் அவலம்
புதிய நாடாளுமன்றத்தில் மழைநீர் ஒழுகுவதை பக்கெட் மூலம் பிடிக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
நாடாளுமன்ற கட்டிடம்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜூலை 22 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார். இதன் பின் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் டெல்லியில் நேற்று மாலை கனமழை பெய்ததால் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. இந்நிலையில் நாடாளுமன்ற வளாகத்திலும் மழை நீர் தேங்கியதுடன் மைய கட்டிடத்தில் நீர் கசிவு ஏற்பட்டுள்ளது.
ஒத்திவைப்பு தீர்மானம்
இந்த நீரை நாடாளுமன்ற அதிகாரிகள் பக்கெட் வைத்து பிடிக்கும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடம் 970 கோடி செலவில் கட்டப்பட்டு கடந்த ஆண்டு மே மாதம் தான் பயன்பாட்டுக்கு வந்தது.
வினாத்தாள் கசிவு வெளியே.
— Su Venkatesan MP (@SuVe4Madurai) August 1, 2024
மழைநீர் கசிவு உள்ளே.
நேற்றைய மழையின் போது புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் குடியரசுத் தலைவர் வரும் பிரதான வாயிலின் வழியே மழைநீர் வந்து கொண்டிருந்தது.#Paperleak_outside#Parliament_leaksinside pic.twitter.com/VzETfOvRwt
இத்தனை கோடி செலவில் கட்டப்பட்ட நாடாளுமன்றத்தில் ஒரு வருடத்திலே மழை நீர் கசிவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் அளித்துள்ளார்.
இதில் அனைத்துக் கட்சி எம்பிக்களும் அடங்கிய சிறப்புக் குழு அமைக்கப்பட்டு நாடாளுமன்ற கட்டடத்தை ஆய்வு செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.