இந்த துறையில் வேலை செய்யும் ஆண்கள்தான் அதிக துரோகம் செய்றாங்களாம் - மனைவிகள் உஷார்!
டெக்னாலாஜியை பயன்படுத்தி பணம் சம்பாதிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கணவர் துரோகம்
மேட்லைன் ஸ்மித்(30) என்பவர் ஏமாற்றும் ஆண்களை கையும் களவுமாக பிடிப்பதை தொழிலாக செய்து வருகிறார். தனது கணவர் மற்றும் காதலர் மீது சந்தேகம் கொண்டுள்ள பெண்கள் இவர் வாடிக்கையாளர்களாக இருக்கின்றனர்.
இதில் துரோகம் செய்யும் ஆண்களை அம்பலப்படுத்தவும், அவர்களின் துணையின் சந்தேகங்களை உறுதிப்படுத்தவும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகிறார். மூன்று ஆண்டுகளாக இந்த சேவையை செய்து வருகிறார். இதுவரை 5,000 சோதனைகளை நடத்தி நூற்றுக்கணக்கான ஆண்களை வெற்றிகரமாக சிக்க வைத்துள்ளார்.
சூடுபிடிக்கும் தொழில்
இதுகுறித்து அவர் பேசுகையில், "நான் இதைச் செய்யத் தொடங்கியதிலிருந்து 100க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகளை கையும் களவுமாக பிடித்து அவர்கள் மனைவியிடம் ஒப்படைத்திருக்கிறேன்.
என் அனுபவத்தில் இந்த துறையை சேர்ந்தவர்களே அதிக துரோகம் செய்ய வாய்ப்புள்ளது." என்று தெரிவித்துள்ளார். தனிப்பட்ட உடற்பயிற்சி பயிற்சியாளர்களும் இந்த பட்டியலில் முக்கிய இடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. தொடர்ந்து வழக்கறிஞர்கள் உள்ளனர்.
மருத்துவர்கள் அவரது பட்டியலில் கடைசியாக வருகிறார்கள். மேலும், தங்கள் உடல் வலிமையைக் காட்டும் படங்களைப் பகிரும் ஆண்கள் ஏமாற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம். விடுமுறையில் தாங்கள் தனியாக இருக்கும் படங்களை பதிவிடுபவர்களும் அதிகம் ஏமாற்றுகிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.