இனி Zoo-விற்கு ஆண்கள் தனியாக வர தடை.. மீறினால் இதுதான் நிலைமை - எங்க தெரியுமா?
உயிரியல் பூங்காவிற்கு ஆண்கள் தனியாக வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
உயிரியல் பூங்கா
ஜப்பானின் டோச்சிகி மாகாணத்தில் ஹீலிங் பெவிலியன் என்ற உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்கா கடந்த ஆண்டு மார்ச் மாதம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.
இங்குப் பன்றிகள், பூனைகள், நாய்கள் மற்றும் செம்மறி ஆடுகள் போன்ற விலங்குகளுடன் பார்வையாளர்கள் பழகவும், உணவளிக்கவும், அவர்களுடன் நேரத்தைச் செலவிடவும் அனுமதிக்கப்படுகிறார்கள்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் ஆண் பார்வையாளர்கள் பெண் ஊழியர்களிடம் தவறாக நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் பெண் ஊழியர்கள் மன உழைச்சலில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
ஆண்களுக்கு தடை
இதன் காரணமாக உயிரியல் பூங்காவிற்கு வரும் ஆண் பார்வையாளர்கள் தனியாக வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக அறிவிப்புப் பலகையும் பூங்காவில் வைக்கப்பட்டுள்ளது. அதில், ஆண் பார்வையாளர்கள் குடும்பம் அல்லது நண்பர்களுடன் வர வேண்டும்.
ஆண்கள் தனியாக வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பெண் ஊழியர்கள் மற்றும் விருந்தினர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இத்தகைய நடவடிக்கை என்று கூறப்பட்டுள்ளது. மேலும் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.