பல ஆண்டுகளாக சடலங்களுடன் வாழ்க்கை நடத்தும் வினோத கிராமம் - காரணம் கேட்டால் ஆடி போய்டுவீங்க!
சடலங்களுடன் வாழும் வினோத கிராமம் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
வினோத கிராமம்
பல்வேறு உலக நாடுகளில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய விதவிதமான சடங்குகள் கடைப்பிடிக்கப்படும். அதன்படி இந்தியாவில் ஒரு குறிப்பிட சில சமுகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் இறந்தவர்களின் உடல்களைத் தகனம் செய்வர். இன்னும் சிலர் தங்கள் மத வழக்கங்களை பின்பற்றி உடல்களைத் தகனம் செய்யப்படும்.
ஆனால் இரு குறிப்பிட்ட நாட்டில் மட்டும் இறந்தவர்களைத் தகனம் மற்றும் அடக்கம் செய்யாமல் ஆண்டு ஆண்டு காலமாக வாழ்ந்து வருகிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா? இது குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்தோனேசியாவில் உள்ள டோராஜன் இன மக்கள் ஒரு வினோத பழக்கத்தைக் கடைப்பிடிக்கின்றனர்.
அதாவது, இந்த கிராமத்தில் இறந்தவர்களின் உடலைப் பல வாரங்கள், மாதக்கணக்கில் ஏன் சொல்லப்போனால் ஆண்டுக் கணக்கில் கூட அவர்களை வீட்டில் அப்படியே வைத்துக் கொள்வார்களாம்.
மேலும் உயிரிழந்தவர்களின் உடலை வைக்கத் தனியாக ஒருஅறை உருவாக்கி அவர்களுக்கென புதிய ஆடை அணிவித்து, நேரத்திற்கு உணவு, சிகரெட் உள்ளிட்டவற்றைக் கொடுப்பார்களாம்.
சடலத்துடன் வாழ்க்கை
அதன் பிறகு இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்கிறார்கள். மேலும் இறந்தவர்களின் ஊர்வலத்தில் எருமைகளைப் பலியிட்டு விருந்து கொடுப்பார்களாம்.அதுமட்டுமில்லாமல் இந்த சடங்கைப் புதைக்கப்பட்ட உடல்களைத் தோண்டி எடுத்து சுத்தம் செய்து கொண்டாடுவார்களாம்.செய்வார்களாம்.
இதற்கு மானேனே சடங்கு என்று அழைக்கப்படுகிறது. இப்படிச் செய்வதற்குக் காரணம் என்ற கேள்வி தோன்றும்.குடும்பத்தில் ஒருவர் நம்மை விட்டுப் பிரியும்போது பெரும் துயரத்தை ஈடு செய்ய முடியாது. அப்போது உடனே அவரை புதைத்துவிட்டால் அதனைத் தாங்கிக் கொள்ள முடியாது. இதன் காரணமாகவே இப்படிச் செய்வதாகக் கூறப்படுகிறது.