பச்சை நிற உடும்புகள் கொல்ல காரணம் இதுதான் - தைவான் அரசு சொன்ன அதிர்ச்சி தகவல்!
1.2 லட்சம் உடும்புகளைக் கொல்ல தைவான் அரசு முடிவு செய்துள்ளது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
உடும்பு
ஆசிய நாடான தைவானில் பச்சை உடும்புகள் அதிக அளவில் உள்ளது.இங்கு 2 லட்சத்துக்கும் அதிகமான உடும்பு வகைகள் உள்ளன. அதிலும் பச்சை நிற உடும்புகள் மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியனை சேர்ந்தது.பொதுவாக ஆண் உடும்புகள் 2 அடி நீளம் முதல் 6.6 அடி நீளம் வரை வளரக்கூடியவை.
5 கிலோ கிராம் எடை கொண்டவை. 20 ஆண்டுகள் வரை வாழும்.பெண் உடும்புகள் ஒரே நேரத்தில் 80 முட்டைகள் வரை இடும் தன்மை கொண்டது.இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகத் தைவானில் உடும்புகளின் எண்ணிக்கை அதிக அளவில் பெருகி விட்டது.
இதனால் விவசாயத் துறையில் கடும் பேரழிவை ஏற்படுத்தி உள்ளதாக அந்நாட்டி அரசு தெரிவித்துள்ளது.அதுமட்டுமில்லாமல் காட்டுப்பகுதிகளிலிருந்த உடும்புகள் கூட்டம் கூட்டமாக நகர்ப்புறங்களில் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு வந்து அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.
தைவான் அரசு
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 1.2 லட்சம் உடும்புகளைக் கொல்ல தைவான் அரசு முடிவு செய்துள்ளது.அதன்படி, ஒரு உடும்புகளைக் கொல்பவர்களுக்கு 15 அமெரிக்க டாலர்கள் வரை (இந்திய மதிப்பில் ரூ.1,300) பரிசு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடும்புகளை இயற்கையாகவே வேட்டையாடி அவற்றின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் உயிரினங்கள் அங்கு இல்லை என்பதால் இந்த முடிவை எடுத்ததாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.